சக்தி வளங்கள்( Energy Resources) by preethi km

சக்தி வளங்கள்
உலகில் அனைத்து நடவடிக்கைகளும் சக்தியை பயன்படுத்துவதன் மூலமே தடைபெறுகின்றன சக்தியில்லாமல் உலகில் எதுவும் இயங்க முடியாது என்பது.

சக்தி ஆதாரங்களின் வகைகள்
புதைபடிவ எரிபொருள்கள் (Fossil Fuels):

இவை இயற்கையிலேயே தோன்றுகின்ற எரிபொருள்களாகும். இவை உயிரினங்களின் உடல் அல்லது தாவரங்கள் அழுகுவதால் உருவாகின்றன. பூமியில் எரிபொருள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவையாக உள்ளன.

2.கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோலியம்:
கச்சா எண்ணெய் வழக்கமாக கடற்கரைகளிலும் நிலத்திற்கு அடியிலும் மிக ஆழத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் இது பெரும்பாலும் இயற்கை வாயுவுடனேயே தோன்றுகின்றது.மண் மாறுபாட்டு ஆராய்ச்சி துறையாளர்கள் மண் மாறுபாடு தொடர்பான தகவல்களை ஆராய்ந்து எண்ணெய் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்கின்றனர்.

3. இயற்கை எரிவாயு:
இயற்கை எரிவாயு மிகச்சிறந்த எரிபொருளாக கருதப்படுகின்றது. ஏனெனில் இதில் அசுத்தங்கள் குறைவாக இருக்கின்றன மற்றும் நன்கு எரிகின்றன. மின்சார தயாரிப்பில் நிலக்கரிக்கு பதிலாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் பொழுது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு 50% முதல் 70% சதவீதம் வரை குறைவாக இருக்கிறது என்பது கண்டுணறப்பட்டுள்ளது.

4.நிலக்கரி
இது உலகின் மிக அதிக அளவில் கிடைக்கிறது. ஆகவே இதன் அடக்கம் மிகக் குறைவு. ஆனால் நிலக்கரியின் உற்பத்தியும் நுகர்வும் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

5. பெருங்கடல் அனல் மின் சக்தி மாற்றம்( ocean thermal energy)
மகர ரேகைக்கு அருகில் உள்ள பெருங்கடல்களின் குளிர்ந்த அடிப்பரப்பில் உள்ள தண்ணீர் மற்றும் சூரிய ஒளியினால் கதகதப்பான மேற்பரப்பு தண்ணீர் ஆகியவற்றில் உள்ள வெப்ப மாறுபாடுகளின் பயன்பாட்டின் மூலம் மின்சக்தி பெறப்படுகிறது் இவ்வெப்ப மாறுபாடுகள் 22 °c வரையிலானதாக இருக்கலாம். இப்பகுதிகளில் மிதக்கும் மின்சக்தி தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். இம்முறையில் கடல் நீரின் மேலும் கீழும் உள்ள வெப்பத்தின் மீது ரசாயன கலவையான அம்மோனியா புரேபைன் வாயு போன்றவற்றை செலுத்தி ஆற்றலை ஆவியாக்கி டர்பைன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.

6. நீர்மின் சக்தி(HYDROELOCTRIC POWER)
இவ்வகையான மின் சக்தி ஓடைகள் மற்றும் ஆறுகளின் குறுக்கே அணை கட்டப்பட்டு பெறப்படுகிறது .அணைகளில் சேமிக்கப்பட்ட நீர் தனிச்சிறப்பு பெற்ற குழாய்கள் மூலம் திறந்து விடப்பட்டு மின் உற்பத்தி கருவிகளின் வெட்டுப் பகுதிகளை திருப்ப பயன்படுத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

7. காற்று சக்தி(wind Energy)
காற்று சூரிய சக்தியின் மூலம் உருவாக்கப் படுகின்றது. காற்று மின்சக்தி தயாரிக்கவும், நீரை இறைத்து எடுக்கவும், தானியங்ளை அரைக்கும் பணியை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படலாம். காற்றால் இயக்கப்படும் முன்னே தள்ளப்படும் வெட்டுப் பகுதிகள் மின் உற்பத்திக் கருவி களை இயக்குகின்றன. அப்பொழுது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வியாபாரத்திற்கு என மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது, பேரளவு டர்பைன்கள் அல்லது காற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்குத் தயாரிக்கப்படும் பொழுது சிறிய அளவு அமைப்புகளே போதுமானவை. ஏனைய மின் ஆதாரங்களுடன் ஒப்பிடும் பொழுது காற்றால் உருவாக்கப்படும் மின்சாரம் மிகவும் சிக்கனமானதாகும். காற்றாலைகள் பொதுவாக கடற்கரை ஓரம் உள்ள பகுதிகளிலும் திறந்த புல்வெளிகளிலும், மலைப் பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன. ஏனெனில், இவை அமைக்கப் படுகின்ற இடங்களில் காற்று நிலையாகவும் ஸ்திரமாகவும் வீசுதல் வேண்டும்.

8.உயிரியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் சக்தி( Biomass Energy)
இச்சக்தி உயரிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது, தாவரங்களிலிருந்து பெறப்படும் ஸ்டார்சை புளிக்க வைத்து ஆல்கஹால் பெறப்பட்டு எரிபொருள் பெறப்படுகிறது.

இந்த எரிபொருள் வாகனங்களை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இதைத்தவிர மரத்தூள் ,உமி, தவிடு ஆகியவற்றை பயன்படுத்தியும் எரிபொருள் சக்தியினை நாம் பெறலாம்.

இவ்வாறு உயிரின கழிவுகள் தாவரம் மற்றும் மற்ற விலங்குகளின் கழிவுகளில் இருந்து மீத்தேன் வாயுவை பெற்று அதனை மின்சாரத்திற்கு இணையான எரிபொருளாக மாற்றலாம்.

இவ்வித எரிபொருள் இன்றைய தினம் பல கிராமங்களில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இம்முறையில் ஆற்றலை பெறுவது சிக்கனமாக இருக்கிறது.

சக்தியும் எளிதில் கிடைக்கிறது.

இது சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை.

9.அணுசக்தி ( Nuclear Power)
அணுசக்தி தொழிற்சாலைகளில் யுரேனியம் 235 பயன்படுத்தப்படுகிறது. அணு எரிபொருளானது புதைப்படிவு எரிபொருள் போல எரிவதில்லை. இது பிளவுபடுகிறது. அதாவது அணுவை பிரிப்பதன் மூலம் அணுசக்தி பெறப்படுகிறது. யுரேனியம் அணு பிளவுப்படும் பொழுது பேரளவில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. அணுப்பிளவுபடும்பொழுது வெளிப்படும் உஷ்ணம் தண்ணீருக்குள் மாற்றப்பட்டு பின் தண்ணீர் மற்றொரு மூடப்பட்ட முறையில் உள்ள தண்ணீரை உஷ்ண படுத்த பயன்படுத்தப்படுகிறது .இங்கு நீராவி உற்பத்தியாகிறது. இந்த நீராவி டர்பைனை இயக்குவதன் மூலம் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது.

நன்மை:

நிலக்கரி எண்ணெய் ஆகியவற்றுடன் ஒப்பிடும்பொழுது இதனால் ஏற்படும் காற்று மாசு மிகக் குறைவு.

அணு எரிபொருளை எடுத்துச்செல்ல ஆகும் போக்குவரத்து செலவு நிலக்கரியை ஒப்பிடும் பொழுது குறைவே ஆகும்.

10.ஆலைகள் சார்ந்த சக்தி(Tidal Energy)
பூமியில் உள்ள இயற்கை சக்திகளில் புவி ஈர்ப்பு சக்தியும் ஒன்றாகும். சூரியன் சந்திரன் ஆகியவற்றின் அமைப்புகளுக்கு ஏற்ப கடலில் நீர்மட்டம் அவ்வப்போது உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகின்றது. அலைகள் அதிக அளவு உயர்ந்து பின் கீழே அடங்குகிறது. அவ்வாறு அதிக அளவு உயர்ந்து அலைகள் மேலே செல்லும் போது அந்த இடத்தில் டர்பைன்களை சுழல வைத்து நாம் மின்சக்தியை பெறலாம்.

11.புவியின் வெப்ப சக்தி(Geothermal Energy)
பூமியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பநீர் ஊற்றுகளில் இருந்து வெளியேறும் ஆவியை டர்பைன்கள் மூலமாக ஆற்றலாக பெறுகின்றனர் .

நன்மைகள்:

இம்முறையில் உருவாகும் மின்சக்தி புதுப்பிக்கக் கூடியதாகும்.

இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

இம்முறையில் குறைந்த செலவில் நாம் மின்சக்தியை பெறலாம் .எனினும் இதற்கு மூலதனம் அதிகமாக தேவைப்படுகிறது.

தீமைகள்:

இதை மற்ற வளங்களைப் போல் பாதுகாப்பாக சேமிக்க முடியாது.

முறையாக பயன்படுத்தாவிடில் தீ விபத்தும் ரசாயன வாயுக்களின் கசிவும் ஏற்பட்டு உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எரிமலையாலும் நில அதிர்வாலும் பூமி பாதிப்படையும்.

12.சூரிய சக்தி (Solar Energy)
சூரிய சக்தியை அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

சூரிய வெப்ப சேகரிப்பாளர் (Solar Heat Collector)

சூரிய மின்கலம் (Solar Cells)

சூரிய அடுப்பு (Solar Cooker)

சூரியன் நீர் சூடேற்றி (Solar Water Heater)

சூரிய உலை ( Solar furnace)

சூரிய சக்தி தொழிற்சாலை (Solar Power Plant).