படைப்பாற்றல் வடிவங்கள் by DHINISHA R

படைப்பாற்றல் வெளிப்பாட்டு வடிவங்கள்
படைப்பாற்றல் என்பது பிறப்பிலேயே அமைவது; இயற்கையானது; ஒருவரிடம் கற்பதால் உருவாக்கப்படுவதன்று எனக் கூறப்பட்டது. அதனால்தான், 'கவிஞன் உருவாவதில்லை; பிறக்கிறான்' எனவும், 'கருவிலே திருவுடையார்' எனவும், தமிழிலும் பிற மொழிகளிலும் சொல்லி வந்துள்ளனர்.

இன்றைய ஆய்வுகள் இதனை மறுக்கின்றன. அனைவரிடமும் படைப்பாற்றல் உள்ளது. அது வெவ்வேறு வழியில் வெவ்வேறு வடிவத்தில் வெளிப்படுகிறது.

மொழியில் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்கள் உள்ளன. அவை அனைத்தையும் உரைநடை, செய்யுள் என்னும் இரண்டனுள் அடக்கலாம்.

'உரைநடை' வடிவம் மொழியைக் கற்கும் தொடக்கக் காலத்திலேயே வெளியீட்டுத் திறன்களான 'பேசுதல்', 'எழுதுதல் ஆகியவற்றில் கையாளப்படுகிறது.

தனிப்பாடல், தொடர்நிலைச் செய்யுள், சிறுகாப்பியம், பெருங்காப்பியம் ஆகியவை செய்யுள் வடிவத்திலான படைப்பிலக்கியங்கள்.

சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கடிதம் ஆகியவை உரைநடை வடிவத்திலான படைப்பிலக்கியங்கள். செய்யுள் வடிவம் தொடக்க வகுப்புகளில் மழலையர் பாடல்களாகவும், பிறகு பாடல் வடிவில் அமையும் இலக்கியங்களாகவும் மாணவர்களுக்குப் புலப்படுத்தப்படுகின்றன.

தலைப்புத் தருதல்
ஏதேனும் ஒரு தலைப்பை மாணவர்களுக்குக் கொடுத்து, அவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சிந்திக்கச் செய்யலாம். ஒவ்வொரு குழுவும், அது முடிவு செய்யும் வடிவத்தில், அத்தலைப்புத் தொடர்பாக, ஒரு படைப்பைக் குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட பக்கங்களுக்குள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தலாம்.

அவற்றை வேறு ஒரு சமயத்தில் வகுப்பில் படித்துக் காட்டி மற்றவர் கருத்தறியச் செய்யலாம்.

குறிப்புகள் தருதல்
குறிப்பிட்ட ஒரு சிக்கலைக் குறிப்புகளாக மாற்றி மாணவர்க்குத் தரலாம்.

அவற்றை வெவ்வேறு குழுவினர் படைப்பாக மாற்றி வகுப்பில் வெளியிட வேண்டும்.

முன்போலப் பிறர் கருத்தறிந்தபின் செழுமைப்படுத்திக் கொள்ளலாம்.

முடிவுகூறச் செய்தல்
கதையின் முடிவை விவாதிக்கச் செய்தல்.

இருக்கும் பழைய முடிவை மாற்றி விட்டுப் புதிதாக ஒவ்வொரு குழுவும் ஒரு முடிவை வெளியிடச் செய்யலாம்.

புதிய முடிவுகளுள் சிறந்த ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுக்கச் செய்யலாம்.

சிறந்த முடிவாக அமைந்ததற்கான காரணங்களை விளக்கச் செய்யலாம்.

சிறந்த முடிவைத் தேர்ந்தெடுத்த குழுவினரையும், விளக்கம் அளித்த மாணவர்களையும் பாராட்டலாம்.

வடிவம் மாற்றுதல்
கதை வடிவில் உள்ளவற்றை நாடகம், கவிதையில் செய்யுள் வழக்கு, புதுக்கவிதை, உரையாடல் போன்றவையாக மாற்றச் செய்யலாம். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வடிவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஈற்றடி தருதல்
ஒரே வடிவத்தில் அதன் வகைகளுக்குள் மாற்றம் செய்யச் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, யானை என்னும் தலைப்பில் ஒரு குழு விளக்கக் கட்டுரை எழுதலாம்; மற்றொரு குழு தன் வரலாறு கூறுதலாக எழுதலாம்; வேறொரு குழு உரையாடலாக எழுதலாம்.

இப்படி ஒரு வடிவத்திற்குள்ளேயே அதன் வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதச் செய்யலாம்.

காலங்கடந்து நிற்கும் படைப்புகள்
தொல்காப்பியம்,

சங்க இலக்கியங்கள்,

திருக்குறள்,

ஐம்பெருங் காப்பியங்கள்,

ஆழ்வார் அருளிச் செயல்கள்,

நாயன்மார் பாடல்கள்,

கம்பராமாயணம்

படைப்பாற்றல் வடிவங்கள்