தமிழர்களின் விளையாட்டு by Krishnadev A

சிலம்பம்
சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.

வழுக்கு மரம்
ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம் விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்படும். அதனை மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார்.

சல்லிக் கட்டு
நாட்டுப்புற மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது சல்லிக் கட்டு ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர் அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு. எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்று பல பெயர்களில் வழங்கப் பெறும் இவ்விளையாட்டினைப் பார்ப்போம். முரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக் கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல் என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம் முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும். காளைகளின் போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும் காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ, கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர் காளைகளால் காயப்படுவதுமுண்டு. காளைகளைப் பிடித்து அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது.

பல்லாங்குழி
பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெறுகிறது.

கிட்டிப் புள்ளு
கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களுடன் 1950-ஆம் ஆண்டு வரையில் நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டுவந்தது

பம்பரம்
போங்காம் பானகரம் (தெலுங்கு), லடிம் லத்தீம் (வங்காள மொழியில்) மற்றும் பங்களாதேஷ் . [1] தெலுங்கானாவில் , அதன் பெயர் "பொங்காரூல் ஆத்தா" ஆகும். [2] இந்த விளையாட்டிற்காகவும் பொழுதுபோக்கிற்காக பெரியவர்கள் விளையாடலாம்.

அம்மானை
அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு.