LYN MOVEMENT - GSSMP Prayer தமிழ் by Core Team

திருச்சபையை சுற்றியுள்ள குழந்தைகளுக்கு சேவை செய்தல்
தமிழ்நாட்டின் பல இடங்களில் கற்றல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன இது அங்குள்ள போதகமார்களுக்கும் உள்ளூர் சமுதாயத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இது  அடிப்படைவாதிகள் பல ஆண்டுகளாக உள்ளூர் சமுதாயத்திலே கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படுத்தியிருக்கிற விரோதங்களை குறைக்கிறது. இந்த கற்றல் மையங்கள் இருப்பதினால் அந்த கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதற்கு இது ஏதுவாய் இருக்கிறது என்று  போதகர்கள் கூறுகிறார்கள்.

கற்றல் மையங்களை/ டியூஷன் சென்டர்களை நடத்தி வருகிற கீழ்காணும் போதகமார்களுக்காக கடவுளை துதிப்போம்.

கீழ்காணும் போதகமார்கள் தாங்கள் எங்கு ஞாயிறு பள்ளியை நடத்துகிறார்களோ அது திருச்சபையோ/ வேறு இடமோ அந்த இடத்தை டியூஷன் மையங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த வகுப்புகளில் பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மாணவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள், அவர்களுக்கு பாடங்களை எடுக்கவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் திருச்சபையில் இருக்கிற விசுவாசிகளான  ஆசிரியர்களை பயன்படுத்துகிறோம். ஆகவே திருச்சபைக்கும் சமுதாயத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. ஞாயிறு வகுப்புகள், கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் விடுமுறை வேதாகம பள்ளி நடைபெறும் இடங்களாக இந்த கற்றல் மையங்கள் இருக்கின்றன. ஆகவே நம்முடைய போதகமார்கள் கடவுளின் அன்பையும் நற்செய்தியையும் இந்த இடங்களில் அறிவிப்பதற்கு இது பயன்படுகிறது, அப்படி இல்லையென்றால் இது சாத்தியம் இல்லாதது.

போதகமார்களின் பெயர்களும் இடங்களும்

1. பாஸ்டர் பிரின்ஸ் -  விளாத்திகுப்பம் புதூர் - தூத்துக்குடி மாவட்டம்

2. பாஸ்டர் புஷ்பராஜ் மீனம்பல்புரம் - மதுரை மாவட்டம்

3. பாஸ்டர் மனிஷ்குமார் சிங்கனம்புரி - சிவகங்கை மாவட்டம்

4. சகோ செல்லையா புலம்பெயர் டியூஷன் மையம் - கரூர்

5. போதகர் ஜெபராஜ் சே குன்னத்தூர் - விழுப்புரம் மாவட்டம்

6. பாஸ்டர் சந்தோஷ் குமார் திருக்கோயூர்- கள்ளக்குறிச்சி மாவட்டம் 7. பாஸ்டர் ராஜு அம்மாபேட்டை - கடலூர் மாவட்டம்

8. இம்மானுவேல் பிரான்சிஸ் கங்கைகொண்ட சோழபுரம் -அரியலூர் மாவட்டம்

நோக்கம்

- ஒவ்வொரு மையங்களிலும் பதிவு செய்திருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கற்றல் திறனலில் மேம்பட வேண்டும், அவர்கள் படிப்பிலும் கடவுளை பற்றிய அறிவிலும் வளர்வது

- இந்தப் பிள்ளைகள் நாட்டின் கடமை உள்ள ஒரு குடிமகளாக/குடிமகனாக வளர வேண்டும் மகிழ்ச்சி அடைவது

- போதகமார்கள் கடவுள் எப்படி ஒவ்வொரு போதகமார்களையும் அவர்கள் குடும்பங்களையும் அவர்தம்  தேவைகளையும் சந்திக்கிறார் என்பதை புரிந்து கொள்வது

- திருச்சபையின் உறுப்பினர்களை ஊக்குவித்து கடவுளுடைய வார்த்தையில் வளரச் செய்து அவர்களை ஆக்குவதற்கு உதவி செய்வது

ஜெப விண்ணப்பம்

# மாணவர்கள் வகுப்புகளுக்கு விடுப்பு எடுக்காது தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் ஆசிரியர்களும் போதகமார்களும் அந்த பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளரச் செய்து அவர்களின் படிப்பின் திறனை மேம்படுத்த வேண்டும்

# சில இடங்களில் மதவாத அடிப்படை வாதிகள் பிள்ளைகளை குறிவைத்து அவர்களை இந்த வகுப்புகளுக்குள் வராமல் செய்ய முயற்சி செய்கின்றனர் அந்த இடங்களுக்காகவும் அந்த பிள்ளைகளுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் அந்த பிள்ளைகள் வகுப்புகளுக்கு எந்த வித பிரச்சனையும்இல்லாமல் தொடர்ந்து வர வேண்டும்.

# போதகமார்கள் ஏற்ற பின்னூட்டங்களை நமக்குத் தருவதின் மூலமாக இந்த கற்றல் மையங்களை நாம் நெறிப்படுத்துவதற்கு ஆண்டவர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபம் பண்ணுங்கள்.

# குழந்தைகள் வகுப்புகள் முடிந்து மீண்டும் வீடுகளுக்கு செல்லும் போது அவர்களின் பாதுகாப்புக்காக ஜெபம் பண்ணுங்கள் ஏனென்றால் இந்த குழந்தைகள் கல்லறைகளையும் டாஸ்மாக் கடைகளையும் கடந்து செல்லுகின்றனர்.

# சில இடங்களில் பிள்ளைகள் ஓட்டல்களில் வேலை செய்து அவர்கள் குடும்பங்களின் உடைய வருமானத்திற்காக வேலை செய்கின்றனர், அந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி இந்த மாலை நேர வகுப்புகளுக்கு அனுப்பவும், வேலைக்கு  அனுப்பாமல் இருக்கவும் ஜெபம் பண்ணுங்கள்.

# புலம்பெயர் தொழிலாளிகள் உடைய பிள்ளைகள் இந்த வாய்ப்பை தவிர்த்து விடுகிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு அந்த தெருக்களிலேயே கிடைக்கிறது இந்த பிள்ளைகள் ஆண்டவருடைய இல்லத்தில் வந்து அடைக்கலம் போகும்படியாக ஜெபம் பண்ணுங்கள்

# போதகமார்களும் ஆசிரியர்களும் மனதுருகுகிற இருதயத்தை கொண்டிருக்கவும் கற்றல் திறனிலே குறைந்திருக்கிற மாணவர்களை நல்வழிப்படுத்தவும் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். ஒரு மெய்ப்பனை போல இந்த பிள்ளைகளை யோசிக்கவும் தோள்களின் மீது சுமக்கிற ஆடுகளைப் போல சுமக்கவும் ஜெபம்பண்ணுங்கள்.

# சகோதரர் ஜோசுவா ஜூனியர் நெய்வேலி சகோதரர் விக்டர் சகோதரர் பாபுஜான் ஆகியோர் இந்த போதகர்களுடனும் திருச்சபைகளுடனும் வேலை செய்கின்றனர் அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.

# ஆன்லைன் டேட்டா மற்றும் அதனை சரி பார்க்கிற சகோதரி பிரியா கோயம்புத்தூர் அவர்களுக்கு உங்கள் ஜெபங்கள் தேவை

கொல்லிமலை ஊழியங்கள்
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மலையில் ஜெஸ்ஸி மான் பிராண்ட் மற்றும் ரெவெரென்ட் எலியாஸ் போன்றவர்களின் கால் தடங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளன.

இந்த மலைத்தொடரில் மலையாள கவுண்டர் என்ற மலைவாழ் பழங்குடியினர் வாழ்கின்றனர், இந்த இடம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை முறையின் மீது பாரம்பரியம் பிடித்திருப்பதால் இந்த சமூகம் முன்னேற்றம் அடையவில்லை. இந்த மக்களுக்கு குழு மிகவும் பழமையான பானியில் வாழ்கிறது மற்றும் நவீன அறிவியல் மேம்பாடு இல்லாமல் இருக்கின்றனர் இந்த நிலத்தில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை குழந்தை திருமணம் என்பது வழக்கமான ஒன்று திருமணம், திருமணமான ஆண்களும் பெண்களும் அவர்களுடைய இணையரை விட்டுவிட்டு வேறொரு நபர்களுடன் செல்வது இங்கு சாதாரணமாக உள்ளது, சுமார் 45 மிஷனரிமார்கள் கடவுளின் முன்கள பணியாளர்களாக இந்த மலையில் ஊழியம் செய்கின்றனர். GSSMP மூலமாக சுமார் 13 நற்செய்தி பணித்தளங்களில் கற்றல் மையங்களை திறக்க ஆண்டவர் உதவி செய்தார். பல முறைகளில் சுவிசேஷத்தை முன்வைக்க விடாமுயற்சியுடன் முயற்சி செய்து வருகிறோம், நாம் அவர்களுக்கு வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும்  வனப் பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்கின்ற  ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்கிறோம். ஆண்டவரை தன் தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியம் உள்ளது என்று வேதம் கூறுகிற படி இந்த மக்கள் ஆண்டவருடைய அன்பை அறிந்து கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பிரதானமான நீரோடையை அடையும்படி ஜெபம் பண்ணுங்கள். நற்செய்தி பணித்தளங்களில் செயல்படும் கற்றல் மையங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் நீங்கள் ஜெபம் செய்யும் போது எங்கு கற்றல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதன் நற்செய்தி பணியாளர் பெயர், நற்செய்தி பணித்தளத்தின் பெயர்  மற்றும் கிராமத்தில்  அதனை சொல்லி ஜெபம் பண்ணுங்கள்.

நற்செய்தி பணியாளரின் பெயர்/இடங்கள்

1. பாஸ்டர் இம்மானுவேல் (AG) -  செல்லூர்

2. பாஸ்டர் இம்மானுவேல் (AG) - வில்லரம்

3.சகோ. பிரேம்குமார் (NMS MISSIONARY) - வாழவந்தபுரம்

4. சகோ பிரேம்குமார் (NMS MISSIONARY) - சித்தூர் அணி

5. சகோ சாலமோன் பிரபு - (சேலம் CSI பேராய நற்செய்தி பனியாளர்) - நாயக்கன் கொம்பை

6. சகோ சாலமோன் பிரபு(சேலம் CSI பேராய நற்செய்தி பனியாளர்) - சில்லெரி

7. சகோ பிரேம்குமார்  (குளோபல் மிஷன் மிஷனரி) - பப்பனம்

8. சகோ சாமிநாதன்(NMS MISSIONARY)- வழக்காடு

9. சகோ ஆபிரகாம் (BEAM MISSIONARY) - திருப்புலி

10. சகோ சுதேஷ் (BEAM MISSIONARY) -  சண்டேங்கரை

11. சகோ சத்யராஜ் (BEAM MISSIONARY) -  இளக்கிறே

12. பாஸ்டர் தாவீது கண்ணன் - Independent Pastor - முள்ளுக்குறிச்சி

13. சகோ சேகர் ஹரி (BEAM MISSIONARY) - பிள்ளப்பட்டி

# பிள்ளைகள் விடுமுறை எடுக்காமல் எல்லா  வகுப்புகளுக்கும் வர ஜெபம் பண்ணுங்கள்

# பாடங்களில் ஏற்படுகிற எல்லா ஐயங்களும் நிவர்த்தி செய்யப்பட சந்தேகங்கள் நீக்கப்பட அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஜெபம் பண்ணுங்கள்

# பெண் பிள்ளைகள் நன்றாக படிக்கவும் குழந்தை திருமணங்கள் தவிர்க்கப்படவும் ஜெபம் பண்ணுங்கள்

# பழங்குடியின பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதினால் டிபன் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, அதனால் வருகைப்பதிவு அதிகரிக்கிறது. இந்தப் பிள்ளைகளுக்கு டிபன் கொடுக்கப்படுவதினால் வருகைப்பதிவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலமாய் அவர்கள் கர்த்தருடைய அன்பை அறிந்து கொள்ளும்படி ஜெபம் பண்ணுங்கள்.

# ஆசிரியர்களும் இந்த பிள்ளைகளை வழி நடத்தி சரியான பாதையில் நடத்தும்படியாய், அவர்கள் எடுக்கிற முயற்சிகளிலே ஆண்டவரின் கிருபை பெருகும்படியாய் ஜெபம் பண்ணுங்கள்.

# ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை போலவே இந்த ஆசிரியர்களும் அதிகாரத்துடன் வழிநடத்தும்படி அதன் மூலமாய் பிள்ளைகள் சரியான முறையில் வளரவும் நல்ல ஒழுக்கங்களுடன் மேம்படவும் சமுதாயத்தில் சிறந்த தலைவர்களாய் உருவாகும்படி ஜெபம் பண்ணுங்கள்.

# பல மக்கள் மந்திரங்களுக்கும் பில்லி சூனியங்களுக்கும் தங்களை விட்டுக் கொடுத்துள்ளனர், இவர்கள் உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் காணும்படியாக ஜெபம் பண்ணுங்கள்

# பல நேரங்களில அந்தகாரத்தின் ஆவிகள் இங்கு ஊழியம் செய்கிற பாஸ்டர்மார்கள் நற்செய்தி பணியாளர்களை  எதிர்த்து நிற்பதை பார்க்கிறோம், வேதம் சொல்லுகிற படி இஸ்ரவேலருக்கு எதிரான மந்திரமும் இல்லை, யாக்கோபுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை என்ற வார்த்தையின் படி இவர்களுக்கு விரோதமாக எழும்புகிற அந்தகாரசக்திகள் அழிக்கப்படவும் கர்த்தருடைய வார்த்தை இந்த மலைப்பகுதிகளில் வளரவும் ஜெபம் பண்ணுங்கள்.

# உள்ளூர் மக்களுடைய திறன்களை மேம்படுத்துவதன் மூலமாக அவர்களுக்கு மார்க்கெட்டுடன் தொடர்பு ஏற்படுத்தும்படி முயற்சிகள் எடுக்கப்படுகிறது, இதன் மூலமாய் கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து கொள்ளும்படி ஜெபம் பண்ணுங்கள், இந்த முயற்சியின் மூலமாய் நற்செய்தி பணியாளர்கள் உள்ளூர் சமுதாயத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வரும்படி ஜெபம் பண்ணுங்கள்.

# ரெவெரென்ட் எலியாஸ் ஆண்கள் விடுதியில் இருக்கிற 35 பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ணுங்கள்,  இந்த பிள்ளைகள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு கல்வியிலும் வளர வேண்டும் கர்த்தருடைய அறிவிலும் வளர வேண்டும் என்று ஜெபம் பண்ணுங்கள்.

# BEAM Missionaries சகோதரர் கார்த்திக் சகோதரர் இளங்கோ ஆகியவர்களுக்காகவும் இதை ஒருங்கிணைக்கிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

# சகோதரி தெபோரா, சகோதரி ஆலிம், சகோதரர் பாபு ஜான் ஆகிய ஒருங்கிணைப்பாளர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்

விசுவாசிக்கிற இளைஞர்கள் யோசேப்பை போல எஸ்தரை போல தானியேல் போல அதிகாரங்களுக்கு வர ஜெபம்
சென்னை போரூரில் உள்ள விங்ஸ் ஆப் விக்டரி அகாடமியில், மூன்று ஐஏஎஸ் பயிற்சி (UPSC Training) இளைஞர்களுக்கு நாம் உதவி செய்ய ஆண்டவர் நமக்கு உதவி செய்கிறார்.

- சென்னையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து செண்பகவல்லி, கொல்லிமலையில் இருந்து ஜீவன் ஆகியோர் இந்த அகாடமியில் கடந்த 14 மாதங்களாக பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர், பிரிலிம்ஸ் தேர்வை பாஸ்  செய்வதற்கு அவர்களுக்கு நம்முடைய ஜெபங்கள் தேவை

- காஞ்சிபுரத்திலிருந்து ரேச்சல் இந்த வருடம் அகாடமியில் இணைந்துள்ளார், அவளும் கடினமான பின்புலத்தை கொண்டவர். எழுத்து தேர்வு, கற்றல், வரலாறு, பொருளியல், விவசாயம் மற்றும் சம்பந்தப்பட்ட பாடங்களில் ஆண்டவர் அவருடைய ஆற்றலையும் ஞானத்தையும் வருகிற காலங்களிலே இவர்களுக்கு கொடுக்கும்படியாய் ஜெபம் பண்ணுங்கள்

- இவர்களுடைய மாதாந்திர செலவுகள், தினசரி செய்தித்தாள்களை வழங்குதல், மாதாந்திர இதழ்கள், மற்றும் புத்தகங்கள் வழங்குதல்  ஆகியவற்றை சமாளிப்பதற்கு ஆண்டவர் நமக்கு உதவி செய்துள்ளார்.

- பாஸ்டர் ஜான் ஜோசப் அவர்கள் இந்த வின்ஸ் ஆஃப் விக்டரி ஐஏஎஸ் அகாடமியை நடத்தி வருகிறார்,அவருக்கும் அவருடைய குழுவுக்கும் நம்முடைய ஊக்கமான ஜெபங்கள் தேவை

- கல்லூரியில் இணைந்திருக்கிற மேலும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு ஐஏஎஸ் தேர்வின் மீது ஒரு பற்று உள்ளது, அவர்களும் யுபிஎஸ்சி தேர்வு எழுத அடுத்த மாதம் ஆலோசனை பெற உள்ளனர்,இதை செய்வதற்கான ஞானத்தை வழிநடத்துதலை ஆண்டவர் தரும்படி ஜெபம் பண்ணுங்கள்

- சகோதரர் அகஸ்டின் சகோதரர் டேவிட்சன் ஆகியோர் இந்த பிள்ளைகளை வழி நடத்துகிற ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.

திருச்சபையை சுற்றியுள்ள சமூகத்தின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் ஊழியம்
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளூர் சமூகத்தை போதகருடன் இணைக்கிறது. இந்த முயற்சிக்குத் தேவையான தையல் இயந்திரங்களை வழங்கவும் பின்வரும் திருச்சபைகள் மற்றும் மையங்களில் ஆசிரியர்களுக்கு உதவவும் ஆண்டவர் நமக்கு உதவினார். நான்கு மாதங்கள் தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்பு ஆய்வுக்குப் பிறகு அவர்களின் திறமையை உறுதிப்படுத்தும் ஒரு NGO மூலம் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த சான்றிதழ் மூலமாக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரங்களை பெற முடிந்தது, இதனால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கான மேம்பாட்டை அவர்கள் பெறவும் உள்ளூர் திருச்சபைகளுடன் அவர்களை இணைக்கவும் முயற்சி செய்கிறோம். தற்போது நடந்து வருகிற கீழ்காணும் தையல் பயிற்சி மையங்களுக்காக ஜெபம் செய்வோம்  1. கும்பகோணம்- சகோதரி நளினி தானியல் 2. செஞ்சி சி குன்னத்தூர் -பாஸ்டர் ஜெபராஜ்  3. காஞ்சிபுரம் பொன்னேரிகுப்பம்- பாஸ்டர் டேவிட் தனராஜ் 4..பெண்கள் மறுவாழ்வு  மையம் -குன்னத்தூர்- சென்னை சகோ வில்சன்  5..ஜிப்சி காலனி- மப்பேடு - தாம்பரம் அருகில்  - இங்கு பயிற்சி பெறுகிற பெண்களின் மூலமாக கிறிஸ்துவின் மறுரூபமாக்குதல் அவர்கள் குடும்பங்களில் வெளிப்படவும் ஜெபம் பண்ணுங்கள் - இவர்களுக்கு தேவையான பிஸ்னஸ் ஆர்டர்கள் கிடைக்கவும், அவருடைய வருமானம் பெருகவும் ஜெபம் பண்ணுங்கள். - இங்கு பயிற்சி பெறுகிற பெண்கள் எல்லாரும் மிகவும் கடினமான குடும்ப சூழ்நிலையை கொண்டவர்கள், ஆண்டவர் இந்த பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும், இவர்களுடைய குடும்பங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று ஜெபம் பண்ணுங்கள். - தங்களின் திருச்சபைகளில் இந்த வகுப்புகளை நடத்துகிற போதகமார்களுடைய தேவைகள் சந்திக்கப்படும்படி ஜெபம் பண்ணுங்கள் - அரசினுடைய அதிகாரம் பெற்ற சான்றிதழ்களை பெறுவதற்கு தங்களுடைய மிஷின்ஸ்களை கொடுத்த சகோதரர்களுக்காக சகோதரிகளுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். - பயிற்சி எடுத்துக்கொண்ட இந்த பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு மாடலை உருவாக்குவதற்கு உங்கள் ஜெபங்கள் தேவை  - இந்த ஊழியத்தை ஒருங்கிணைக்கிற சகோதரி கிளாரெட் பிரின்சி, சகோ டேவிட்சன், சகோ ஜோஷுவா, சகோ பாபு ஜான் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.

சம வாய்ப்பற்ற பிள்ளைகளுடைய உயர் கல்விக்கான ஊழியம்
2024 நீட் ஆன்லைன் கோச்சிங் நடத்துவதற்கு கர்த்தர் நமக்கு உதவி செய்தார் கீழ்காணும் 26 பிள்ளைகள் தினம்தோறும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளுகிறார்கள்

1. கிஷோர் வேலூர் புதுக்கோட்டை

2. அபிநயா குலவைப்பட்டி புதுக்கோட்டை

3. கார்த்திகேயன் பொன்மலை திருச்சி

4. எஸ்தர்வர்ஷினி முதலூர் தூத்துக்குடி

5.கதிர்காமன் கீழக்கன்னி சேரி ராமநாதபுரம் 6.பிரியதர்ஷினி மேப்பா துரை திருவண்ணாமல

7. ரமா நெய்வேலி தஞ்சாவூர்

8. சத்யபிரியா ஆவனான் டி கொள்ளை தஞ்சாவூர்

9.மாரிசெல்வி டிபி குளம் மதுரை

10. செர்லின் தாம்பரம் செங்கல்பட்டு

11. சந்தியா தாம்பரம் செங்கல்பட்டு

12. சங்கவி தாம்பரம் செங்கல்பட்டு

13. மெர்லின் மிர்சா தாம்பரம் செங்கல்பட்டு

14. கார்த்திகேயன் காமராஜபுரம் புதுக்கோட்டை

15. ஜனனி நெய்வேலி தஞ்சாவூர்

16. கார்த்திகா பண்டாரக்குளம் தென்காசி

17. பூஜா நீர் நெற்குன்ற பாளையம் திருவள்ளூர்

18. மாதேஸ்வரி விராலிமலை புதுக்கோட்டை

19. கோபிகா விராலிமலை புதுக்கோட்டை

20. சத்யபிரியா கோவில் கட்டுப்பட்டி புதுக்கோட்டை

21. மகாலட்சுமி கூனிபாளையம் திருவள்ளூர்

22. சுசிதா புதூர் மதுரை 23. தர்ஷினி கல்குடி புதுக்கோட்டை

24. சுகன்யா நெய்வேலி தஞ்சாவூர்

25. தேவி ஸ்ரீ கொடிக்கல்பட்டி புதுக்கோட்டை

மூன்று பருவங்களுக்கான பயிற்சிகள் முடிந்து விட்டது, முதல் பருவம் மார்ச் ஏப்ரல் மாதங்களிலும் இரண்டாம் பருவம் மே மாதங்களில் (தினந்தோறும் இரண்டு வகுப்புகள்) தற்போது மாலை நேரங்களில் மூன்றாம் பருவமும் செப்டம்பர் மாதம் முதலாம் வாரத்தில் முடிவு பெற்றது.

இந்த வகுப்புகளை நடத்தின ஆசிரியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம் அவர்களுக்கு இருந்த அந்த அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டத்தக்கது OMR  ஷீட்ஸ் மூலமாக பிள்ளைகளுக்கு ஆன்லைன் டெஸ்ட் நடத்தும்படி பண்ணவும் அதை மதிப்பீடு செய்யவும் அதற்கு உரிய லைசென்ஸை பெறவும் ஆண்டவர் கிருபை செய்ததினால் அவருக்கு நன்றி செலுத்துவோம். பிள்ளைகளுடைய வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது.

பிள்ளைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கான ஜெபக்குறிப்புகள் - எந்தவிதமான பின்புலமும் கேள்வித்தாள்களும் இல்லாமல் அகில இந்திய தேர்வை தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் எழுதுவது

- இவர்களுடைய பின்புலம் அவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை முடித்து பொறியியல் கல்லூரிக்கு அல்லது நர்சிங் படிப்புகளுக்கோ செல்வதில் ஆர்வம்  காட்டுகின்றனர்,ஆனால் மருத்துவர் தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை

- இப்பிள்ளைகளுடைய முயற்சிகளை குறைத்து மதிப்பிடுகிற அவருடைய பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கிற அழுத்தங்கள்

- கிராமப்புற பின்னணியில் ஏழை எளிய மாணவர்களாக இருப்பதினால் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக விரைவில் வியாதி பட்டு விடுகின்றனர்

-  தொழில்நுட்ப காரணங்களினால் ஒரு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு தேவையான கிருபையை ஆண்டவர் நமக்கு தர வேண்டும்

- இதுவரை 36 தேர்வுகளை நடத்தும் படி ஆண்டவர் உதவி செய்தார் இப்பிள்ளைகள் அரையாண்டு தேர்வு எழுதுவதற்கு முன்பாக மீதி தேர்வுகளையும் எழுத திட்டமிட்டு இருக்கிறோம், இந்த தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும்படியாய் ஜெபம் பண்ணுங்கள்

- நிறைய பெற்றோர் படிப்பற்றவர்களாக குடிப்பழக்கத்திற்கு அதிக அடிமைகளாக இருப்பதினால் குறிப்பாக பெண் பிள்ளைகள் இந்த வகுப்புகளில் கலந்து கொள்வது ஒரு சவாலாக உள்ளது

- நாம் அவர்களுக்கு தேவையான இணையதள சேவைக்கான பணத்தை தருவதற்கு தயாராக இருந்தாலும், அவர்கள் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்வதற்கு தயங்குகின்றனர், இந்த பிள்ளைகள் தயக்கமில்லாமல் தேவைப்படுகின்ற நேரங்களில் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள ஜெபம் பண்ணுங்கள்

- நமக்கு கேள்விகளை தயார் செய்ய மூன்று நபர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டவர் சரியான ஞானத்தை கொடுத்து சரியான நேரத்தில் அந்த பிள்ளைகளுக்கான மெட்டீரியல்ஸ்களை தயார் பண்ண ஜெபம் செய்யுங்கள்.

- இந்த பிள்ளைகளுடைய பாடத்திட்டங்கள் கொரோனா முடக்கத்தின்போது குறைக்கப்பட்டதினால் அவர்களுக்கு அடிப்படை தகவல்கள் புரிந்து கொள்வதற்கான திறனை ஆண்டவர் தரும்படி ஜெபம் பண்ணுங்கள்

- இந்த பிள்ளைகள் சரியான விடைகளை தைரியமாக எடுக்கவும் தவறான விடைகளை தவிர்க்கவும் ஜெபம் பண்ணுங்கள்

- மதுரையிலிருந்து சகோ அருவிதா, கோயம்புத்தூரில் இருந்து சகோ ராஜபுஷ்பம் ஆகியோர் இந்த பிள்ளைகளுக்காக இரவும் பகலும் தூண்களாக இருந்து உழைக்கின்றனர். அவர்களுக்காகவும் அவருடைய பிள்ளைகளுக்காகவும் அவருடைய தேவைகளுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

- இந்த வகுப்புகளை பார்வையிடுகிற நிர்வகிக்கிற ஆன்லைன் அட்மின்ஸ் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்

- இந்த ஊழியத்தை ஒருங்கிணைக்கிற சகோ ஆனந்த் பெங்களூர், சகோ சோபியா, சகோ பாபு ஜான் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.

விசுவாசம் உள்ள அனுபவம் மிக்க தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் உயர்நிலை பதின்ம வயதினருக்கு ஊழியம்
பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை குடிசைப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் இது பெரும்பாலும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் பெரும் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களான விசுவாசிகளை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம். இவர்கள் இதை அவர்களின் பள்ளி நேரத்துக்கு பிறகு செய்கிறார்கள்.

- தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 150 குழந்தைகள் கலந்து கொள்கின்றனர்.

- இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான சகோ அருவிதா- மதுரை சகோ ராஜபுஷ்பம் கோயம்புத்தூர், சகோ ஆண்சி சென்னை மற்றும் சகோ பிரியா மெமிசெல் ஆகியோருக்காக கடவுளுக்கு நன்றி.

- இந்த ஆன்லைன் வகுப்புகளை  ஜெபத்தோடு நிர்வகிக்கும் சுமார் 25 ஆன்லைன் நிர்வாகிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

ஜெபக்குறிப்புகள்

# தினமும் இந்த ஆன்லைன் வகுப்புகளை திறந்து பிள்ளைகளுக்காக ஜெபிக்கவும், ஆசிரியர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆன்லைன் அட்மின் சகோதரிகளுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். இவர்கள் இந்த ஊழியத்தை முழுமையாகவும் விடாமுயற்சியுடன் பார்க்கும்படியாக தேவனுடைய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதற்கு இந்த ஊழியத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும்படி ஜெபம் செய்யுங்கள்.

# இந்த கற்றல் மையங்களில் 10ம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கப்படும் பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நமக்கு தேவை, அதற்காகவும் ஜெபம் செய்யுங்கள்.

# இந்த பயன்பாட்டிற்காக ஒரு வலைப் பக்கத்தை (வெப்சைட்) உருவாக்க ஆண்டவர் எங்கள் தொழில்நுட்பக் குழுவை ஆசீர்வதித்தார். அவர்கள் தன்னார்வலர்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக பயிற்சி அளித்து இருக்கின்றனர். இந்த பயிற்சியின் மூலமாக பயிற்சியை பெற்றுக் கொண்டவர்கள், வகுப்புகளை சரியான முறையில் ஒருங்கிணைக்கவும் ஆன்லைன் அட்மின் சகோதரிகள் மற்றும் மாணவர்களுக்கு சாதகமாக இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வகுப்புகளை திறம்பட கையாளவும் ஜெபம் செய்யுங்கள்.

# இணையதள இணைப்பு அல்லது உள்ளூர் திருவிழாக்களில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியாத நேரங்கள் உள்ளன, இந்த மாணவர்கள் அனைவரும் எங்கள் இணையதளத்தில் உள்ள வகுப்பறை பதிவுகளை பார்வையிட்டு அதை பயன்படுத்திக் கொள்ளும்படி ஜெபம் செய்யுங்கள்.

# எங்களிடம் ஐந்து stream வகுப்புகள் இருப்பதால் அதை சரியாக செயல்படுத்துகிற சகோதரி பிரியா அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். இவர்கள் ரெக்கார்ட் செய்யப்பட்ட வகுப்புகளை கூகுள் டிரைவில் பதிவேற்றுகிற ஊழியத்தை செய்கிறார்கள்.

# நம்முடைய ஊழியத்திற்கு கூகுள் கிளாஸ் ரூம் சூட் வாங்குவதற்கு எபினேசர் தொடக்க பள்ளி ஓசூர் மூலமாக ஆண்டவர் கிருபை செய்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த ஊழியத்திற்கு உதவி செய்கிற பள்ளி நிர்வாகத்தையும் அவர்களின் முயற்சியையும் ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொல்லி ஜெபம் பண்ணுங்கள்.

# இந்த ஆன்லைன் தளத்தின் மூலமாக ஒதுக்கப்பட்ட, ஓரம் கட்டப்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்க தங்கள் நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்கிற விசுவாசிகளான ஆசிரியர்களுக்காக தேவனை போற்றுங்கள்

நம்முடைய தேவன் அவர்களை ஆசிர்வதித்து அவர்களை கனம் பண்ணி தேவனுடைய ராஜ்ஜியத்தில் பயன்படுத்தும்படி ஜெபம் பண்ணுங்கள்.

# இந்த ஊழியத்தை ஒருங்கிணைக்கிற சகோதரர் ஜோஸ்வா சகோ பியூலா மற்றும் சகோ பாபு ஜான் ஆகியோருக்காக ஜெபம் பண்ணுங்கள்.

அணுக முடியாத இடங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஊழியம்
தொலைதூர இடங்களில் இருக்கும் பல உயர்நிலை பள்ளி மாணவர்கள் எங்களது ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிவு செய்திருந்தால், பதிவு செய்திருந்த மாணவருடைய எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு மடிக்கணினி அல்லது மடிக்கணினுடன் கூடிய டிஜிட்டல் டிவி வழங்கப்படுகிறது.

இந்த மையங்கள் மெய் நிகர் வகுப்புகள் (Virtual Classroom) என்று அழைக்கப்படுகிறது. பின்வரும் இடங்களில் உள்ள கற்றல் மையங்கள் மற்றும் போதகர்மார்கள் மற்றும் நற்செய்தி பணியாளர்களால் ஒருங்கிணைக்கப்படுவதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

1. Rev Elias Boys Hostel – Kolli Hills – Bro Karthik

2. GSSMP Virtual Learning Centre – Pitchavarm – Bro Beema Rao

3. IEM Boys Hostel – Krishnagiri

4. ECI Learning Centre – Thippramalai

5. ECI Learning Centre – Nagapattinam

6. ECI Learning Centre – Perunthuravikuppam

7. ECI Learning Centre – Mandavikuppam

8. ECI Learning Centre – Kolladi

9. ECI Learning Centre – Pathirikuppam

10. ECI Learning Centre – Pazhavercadu

11. Messiah Jesus Church – Se Kunnathur, Chenjee

12. NSM – FMPB Boys Hostel – Udangudi

13. NSM – FMPB Girls Hostel – Megnananpuram

14. NSM – FMPB Boys Hostel – Vellore

15. NSM – FMPB Boys Hostel – Krishnagiri

16. NSM – FMPB Girls Hostel - Krighnagiri

- கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்கள் டிஜிட்டல் வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் கருத்துக்களை புரிந்து கொள்ள ஆண்டவர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஜெபம் பண்ணுங்கள்.

#  சில மாணவர்களில் சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக உள்ளது. அவர்களையும் எங்களுடன் எடுத்துச் செல்லவும் அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும் ஆண்டவர் எங்களுக்கு உதவுமாறு ஜெபம் செய்யுங்கள்.

# தட்பவெப்ப நிலை அல்லது உள்ளூர் திருவிழாக்கள் இந்த மாணவர்களை இந்த வகுப்புகளுக்கு செல்வதை தடுக்காதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்

# வகுப்புகள் முடிந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பும் மாணவருடைய பாதுகாப்புக்காக ஜெபம் செய்யுங்கள்

# இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களிடையே ஒழுக்கம் காணப்படும் படியாக ஜெபியுங்கள்

# இந்த நெருக்கமான அறைகளில் வருகை கண்காணிக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்

# இந்த மையங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

# அவர்கள் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதோடு அவர்களுக்கு ஏற்படுகிற சவால்களை கருத்தில் கொண்டு எங்களிடம் அதனை கொண்டு வரும்படி ஜெபம் செய்யுங்கள்

- இந்த முயற்சியை தனியாக எடுத்துக் கொண்டிருக்கும் சகோ.ஜோஸ்வா அவர்களுக்காக கடவுளை ஸ்தோத்தரித்து ஜெபம் செய்யுங்கள்

ஆக்கப்பூர்வமான கற்றல் பொருட்களை உருவாக்குவதற்கான ஊழியம்
ஊரு குழந்தை மூஞ்சரை வயதை கடக்கும் முன் குறைந்தது 3,500 வார்த்தைகளை கற்கும் திறனை பொறுத்து அக்குழந்தை படிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன்களை பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

- ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்ற "பகல் நேர பராமரிப்பு மையங்கள் (Day Care Centres) இருந்தாலும் இந்த கற்றல் திறன் வழங்கப்பட இயலாது.

-எங்கள் குழுவில் உள்ள சில சகோதரிகளை இந்த மக்களுக்கு சரியான நேரத்தில் உதவும் படி இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஆண்டவர் தூண்டினார்- மப்பேடு ஜிப்ஸி காலனியில் உள்ள (கிட்ஸ் கிரியேட்டிவ் லேர்னிங் சென்டர்) குழந்தைகள் கற்றல் மையங்களை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள 11 குழந்தைகளுக்கு உதவி செய்வோம் என்று நம்புகிறோம்.

ஜெப குறிப்புகள்

- இந்த குழந்தைகள் மீது நம்முடைய ஆண்டவர் வைத்திருக்கும் ஆர்வத்தை விருப்பத்தையும் குழு புரிந்து கொண்டு அந்த பாடங்களில் உள்ளடக்கத்தை வடிவமைக்க ஜெபம் செய்யுங்கள்

# கடவுளின் தீர்வுககள் எப்பொழுதும் தண்ணீரை திராட்சை ரசமாக மாறுவது போல எளிமையானவை, எனவே இந்தகுழு, கற்றல் செயல் முறையை எளிதாக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்

# இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் சகோ ஜெபா ஜெனிக்கா மற்றும் சகோ ஆலின் ஆகியோரின் முயற்சிகளுக்காக ஜெபியுங்கள்

# இந்த முயற்சியை ஆதரிக்கும் வலுவான ஜெபக்குழுவை ஆண்டவர் உருவாக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள்

மணிப்பூரில் இருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பேரிடம் பேரிடர் நிவாரணம் வழங்குதல்
- மணிப்பூரில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக மணிப்பூரை விட்டு வெளியேறிய குக்கி மற்றும் மேத்தி குடும்பங்களை ஆதரிக்க ஆண்டவர் எங்களுக்கு உதவினார்.

- இந்த உதவியானது கேரிசன் திருச்சபை- ஆதம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கலில் உள்ள இளைஞர்களை கொண்ட சிஎஸ்ஐ வாய்ஸ் ஆப் ஈடன் குழுவின் ஒருங்கிணைப்பினால் இந்த ஊழியம் செய்யப்பட்டது.

- இடம்பெயர்ந்த இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் எரிவாயு மற்றும் வீட்டு வாடகை ஆகியவற்றை ஏற்பாடு செய்ய ஆண்டவர் இந்த குழுவிற்கு உதவினார்.

- இளைஞர்களுக்கு வேலை தேடுவதற்கும் மாணவர்களை  உயர்கல்விக்கு கண்டுபிடிப்பதற்கும் கடவுள் உதவி செய்தார்

ஜெப குறிப்புகள்

- சமாதான பிரபு இந்த நேரங்களில் இரு சமூகங்களும் நிம்மதியாக மாறும்படி உதவி செய்யும்படி ஜெபம் செய்யுங்கள்

- பல தேவாலயங்களும் அவற்றின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.இரு சமூகத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தையும் சமுதாயத்தையும் மீண்டும் கட்டி எழுப்ப தேவனிடம் வேண்டுங்கள்.

- கலவரம் பாதித்த பகுதிகளுக்கு மருத்துவ உதவி வழங்கும் கடினமான பழியை மேற்கொள்ள பல மருத்துவர்கள் முன்வந்துள்ளனர் ஆண்டவர் அவர்களின் பயணத்தை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு ஒரு சுகமாக்கும் தொடுதலை வழங்கவும் வழி காட்டவும் ஜெபம் செய்யுங்கள்.

இந்த ஊழியத்திற்கு தேவையான சகலவற்றையும் சந்திப்பதற்கு ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். இவ்வூழியத்தின் நிதிகளை நிர்வகிக்க உதவிய சகோ டேவிட்சன், சகோ அகஸ்டின், சகோ பாபு ஜான் அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

- சமவாய்ப்பற்ற பிள்ளைகள், வல்லுனர்கள், கற்றல் மையங்களில் உள்ள ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் டிஜிட்டல் வகுப்பறைகளுக்கான சாதனங்கள், தியாகத்துடன் பணியாற்றும் போதகர்களுக்கான அவர்களின் தேவைகளுக்கும் நாம் பணம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்கள் ஒவ்வொரு தேவைக்கும் ஆண்டவரை சார்ந்திருக்கும் படியாக ஜெபம் செய்யுங்கள்.

ஒருவேளை நீங்கள் பெற்றிருக்கிற அறிவை, நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஆண்டவர் உங்களை பாரப்படுத்தினால் தயவு செய்து மேற்கொண்ட ஊழியங்களில் ஒரு பகுதியாக நீங்கள் இணைந்து கொள்ளலாம் .

- சுமார் 15 தன்னார்வ விசுவாசிகள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், 30 தன்னார்வ விசுவாசிகள் GSSMPயின் (STRATEGY GROUP) வியூக குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.

19.11.2023
விராலிமலையைச் சேர்ந்த எங்கள் நீட் தேர்வு மாணவர் ஒருவருக்கு நாய்க்கடி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் குணமடைந்து படிப்பைத் தொடர பிரார்த்தனை செய்யுங்கள்.

2025 ம் ஆண்டில் நடக்க இருக்கும் நீட் 2025 தேர்விற்கான மாணவர்களை பயிற்சி அளிக்க சம வாய்ப்பில்லாத மாணவர்களைத் தெரிவு செய்ய உள்ளோம்.

தேவனுடைய கிருபையால் 120 க்கும் மேற்பட்ட மாணவ/ மாணவிகள் இது வரை பதிவு செய்துள்ளனர்.

மீதியானியருக்கு விரோதமாக போரிடும் இஸ்ரோவின் படை வீரரை தேவனே தெரிவு செய்து கிதியோனிடம் கொடுத்தது போல - கடைசி வரைக்கும் நாங்கள் அளிக்கும் பயிற்சியை பயிலக்கூடிய மாணவர்களை தேவன் அடையாளத்தை காட்டிட - அவர்களை மாத்திரம் இந்த பயிற்சியில் இணைத்திட ஜெபித்துக் கொள்ளுங்கள்

23.11.2023
நாளை நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஜெபிக்கவும்- (23/11 - Thursday):

# +2 - Commerce -Tamil medium  -

All subjects - 7 to 8 pm only

History:

Teacher: Sis Navamani

OAS: Sis Vasantha Rani

Computer Applications:

Teacher: Sis Jeyanthy

OAS: Sis Jansy

Business Maths:

Teacher: Sis Inba

OAS: Sis Indra Mohan

# +2 Bio/Computer Science - Maths -Tamil medium

7 to 8 pm

Subject: Chemistry

Teacher: Bro Jeba Kumar

OAS: Sis Elizabeth

08: 00 to 09: 00 pm

Subject: Physics

Teacher: Bro Ezhilarasu Rajiah

OAS: Sis Hebzibah

# +2 Bio/Computer Science - Maths -English medium

07: 00 to 08: 00 pm

Subject: Maths

Teacher: Sis Regina Mary

OAS: Sis Jerin

08: 00 to 09: 00 pm

Subject: Physics

Teacher: Sis Sumathy

OAS: Sis Josephine

# 10th - Tamil medium

07: 00 to 08: 00 pm

Subject: Science

Teacher: Sis Bhuvaneshwari

OAS: Sis Rency

# 10th English medium:

07: 00 to 08: 00 pm

Subject: Maths

Teacher: Sis Zeenath Miriam

OAS: Sis Blessika

8: 00 to 9: 00 pm

Subject: Science

Teacher: Sis Hilda

OAA: Sis Hanithamal

NEET - Tamil medium

07: 00 to 08: 00 pm

Subject: Zoology

Teacher: Mr Samidurai sir

OAS: Sis Priya