PQI6095-1 by Mohana Dass Ramasamy

மொழி கற்பித்தலின் கோட்பாடு, அணுகுமுறை, முறைகள் மற்றும் நுட்பங்கள் பற்றிய ஆய்வு: தமிழ் கற்பிப்பதில் உள்ள சவால்கள்.
இதுவரை நாம் பார்த்த தகவல்களின் அடிப்படையில் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே கேட்டல்-பேச்சு, வாசிப்பு, எழுதுதல், இலக்கணம் கற்றல்-கற்பித்தல் தொடர்பான சால்களுள் ஒன்றனைக் களைய நீவிர் கையாளக் கூடிய செயல்முறை ஒன்றனைத் தேர்தெடுத்து, 5P  கருத்துரு அடிப்படையில் 500 சொற்களுக்குள் விளக்கம் வழங்கிடுக.

தமிழ் கற்பிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அதனைக் களைய கையாளக் கூடிய செயல்முறை. (கார்த்திக்ராஜா ரமணி)
1.0   முன்னுரை

மலேசியத் தமிழ்மொழிக் கலைத்திட்டமானது தமிழ்மொழி வாயிலாக மாணவர்கள் பிறருடன் தொடர்பு கொள்ளவும் தங்கள் எண்ணங்களை நல்ல மொழியில் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடிப்படை மொழி திறன்களான கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகியவற்றோடு செய்யுள் மற்றும் இலக்கணக் கூறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இக்கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியைப் பிழையற பேசவும் எழுதவும் மாணவர்கள் இலக்கண அறிவைக் கண்டிப்பாகப் பெற வேண்டும்.

ஆனால், இலக்கணத்தின் மேல் ஆர்வம் இல்லாததால் பெரும்பான்மையான இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கணம் மனனப் பாடமாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் இலக்கணத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவதில்லை. மாறாக, இலக்கண விதிகளை மனனம் செய்து பயன்படுத்துகிறார்கள். இதனால் உயர்நிலை சிந்தனை கேள்வியாக இருப்பின் மாணவர்களால் பகுத்தாய்ந்து தீர்வு காண முடிவதில்லை. சில வேளைகளில்  மனனம் செய்த விதியை செய்த விதியை மறந்தும் விடுகிறார்கள்.

இக்காலக்கட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப கற்றல் கற்பித்தலிலும் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றது. 21-ஆம் நூற்றாண்டுத் திறன், ஆக்கச் சிந்தனையும் ஆய்வுச் சிந்தனையும் கொண்ட மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. எனவே, சிந்தனைத் திறனும் எதிர்கால சவால்களை எதிர்கொண்டு தீர்வு காணும் மாணவர்களையும் உருவாக்க புத்தாக்க கற்றல் கற்பித்தல் அவசியமாகிறது. மாணவர்களுக்கு இலக்கண அறிவைப் போதிப்பதோடு சிந்தனைத் திறன் கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும்.

2.0   5P கொள்கை

தமிழ் மொழி கற்பித்தல் மற்றும் கற்றல் உத்தியானது 5P கொள்கையை வலியுறுத்துகிறது, அதாவது ஒருங்கிணைப்பு, இணைப்பூட்டல், மதிப்பீடு, மீட்பு மற்றும் செறிவூட்டல். இது தேசிய கல்வித் தத்துவத்தில் ஒருங்கிணைந்த கருத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப உள்ளது. 5P கொள்கையின் மூலம், மாணவர்கள் தூண்டுதலில் உள்ள தகவலைச் சரிசெய்து ஒரு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான பாடத்தை உருவாக்க முடியும். கூடுதலாக, 5P கொள்கையானது மாணவர்கள் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை முழுவதும் சலிப்படையாமல் தடுக்கலாம்.

2.1   ஒருங்கிணைப்பு

முதலாவதாக, ஒருங்கிணைப்பு அதாவது தமிழ் மொழி கற்பித்தல் மற்றும் கற்றலில் பல்வேறு அறிவு, மதிப்பு மற்றும் கூடுதல் மதிப்பு திறன்களை உள்வாங்கும் செயல்முறை. மாணவர்கள் இயல்பாகவே விளையாட்டில் ஆர்வமிக்கவர்கள். கற்றல் கற்பித்தல் முறை விளையாட்டு முறையில் அமைந்தால் மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை ஆர்வமுடன் கவனிப்பர். ஆசிரியர்கள் மாணவர்களைக் கவரும் வகையிலுள்ள பாடத் துணைப் பொருட்களை வகுப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பாடத் துணைப் பொருள் என்பது கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பயிற்றுத் துணைப் பொருட்களையும் கொண்டு செல்லலாம், பொருட்களாகவும் கொண்டு செல்லலாம். ஆசிரியர் மற்றும் அவர் கையாளும் பொருள்கள், உத்திகள் போன்றவை மாணவர்களின் கவனத்தைக் கவர்வதாகும்.

2.2   இணைப்பூட்டல்

அடுத்து, இணைப்பூட்டல் அதாவது சிந்தனைத் திறன்களான குணாதிசயங்கள், வகைப்படுத்துதல், தொடர்புகள் மற்றும் உறவுகளை உருவாக்குதல். பொதுவாக, கற்பித்தலில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஆசிரியர் மைய கற்பித்தல், மற்றொன்று மாணவர் மைய கற்பித்தல் ஆகும். வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினருக்குக் குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு மொழியின் அமைப்பையும் அம்மொழியின் அமைப்பை விளக்கும் இலக்கண விதிகளையும் கற்பிக்க, ‘மாணவர் மைய கற்பித்தல்’ முறையே சிறந்தது. அதாவது, இலக்கண விதிகளை வினா-விடை அமைப்பில் கற்பித்தால் இலக்கணப் பாடத்தின் மீதான ஆர்வம் மிகுதியாகும்.

2.3   மதிப்பீடு

அடுத்து, மதிப்பீடு அதாவது சில கற்றல் முடிவுகள் மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் நோக்கங்களின் சாதனையைத் தீர்மானிக்க தகவல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் ‘பயன்பாட்டு வினாக்களுக்கு’ (Applied Questions) அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சான்றாக, உள்ளுறை, இறைச்சி, உள்ளுறை உவமம் போன்ற இலக்கணப் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கும்போது, சங்க இலக்கியப் பாடல்களைக் கொடுக்காமல், திரையிசைப் பாடல்களைக் கொடுத்து அவற்றில் இடம்பெறும் உத்திகளைக் கண்டறியச் சொல்லலாம். அப்போது தான், பள்ளிகளில் இலக்கணம் கற்பித்தல் முழுமை பெறும்.

2.4   மறுசீரமைப்பு

அடுத்ததாக, மறுசீரமைப்பு அதாவது மாணவர்களின் திறன்கள், திறமைகள் மற்றும் ஆர்வங்களை வலுப்படுத்துதல். ஆசிரியர் வகுப்பில் பலவிதமான அணுகுமுறைகளைப் பயன்படுத்த கற்றல் கற்பித்தலை நடத்த வேண்டியது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நாளுக்கு நாள் புதுமையான கற்பித்தல் அணுகுமுறையைக் கையாண்டால் மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும். பாடப் புத்தகத்தை மட்டும் வைத்துப் பாடம் கற்பித்தல் இன்று சிறப்பான அணுகுமுறையாக அமையவில்லை. கடைநிலை மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். எளிமையிலிருந்து கடினத்திற்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்திலே கடினமான ஒரு பயிற்சியை வழங்கினால் மாணவர்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே தோன்றாது.

2.5   செறிவூட்டல்

தொடர்ந்து, செறிவூட்டல். செறிவூட்டல் செயல்பாடுகள், எதிர்பார்த்த நேரத்தில் இருந்து ஆரம்பக் கற்றல் முடிவுகளை அடைந்த மாணவர்களுக்கு மிகவும் சவாலான செயல்களைச் செய்வது போன்றவற்றைத் தகுந்தபடி மாற்றுதல். இன்றைய பள்ளிகளில் அல்லது தேர்வுகளில் தமிழ்மொழிப் பாடத்தில் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறன் கேள்வி கேட்கப்படுகிறது. ஆசிரியர்கள் வினா அணுகுமுறை மற்றும் சிந்தனை வரைபடம் ஆகிய அணுகுமுறைகள் வாயிலாக மாணவர்களின் நுண்ணாய்வுச் சிந்தனைத்திறனை வளர்க்க முடியும்.

3.0   முடிவுரை

தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் 5P கொள்கையானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த 5P கொள்கையை பயன்படுத்துவதன் மூலம் தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் ஏற்படும் சவால்களை சமாளிக்க முடியும்.

(கார்த்திக்ராஜா ரமணி - 17206294/2)

SRI ISWAROOBANI A/P TURUMALAY 17088612
இன்றைய காலங்களில் இடைநிலை பள்ளியில் தமிழ் மொழி கற்றல் மிகவும் சவால்மிக்கதாக அமைந்திருப்பது உணக்கத்தை அளிக்கிறது. தொடக்கப்பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடம் படித்துத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள்கூட இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி கல்வியைப் புறக்கணிப்பது நடைமுறையில் இருப்பதற்கு மாணவர்களின் போக்கும் மனப்பான்மையும் தான் காரணம் எனப் பல ஆய்வறிக்கைகளின் வழி ஓர்ந்து கொள்ள முடிகிறது. தொடக்கப்பள்ளிகளில் தமிழ் கற்றலில் காணப்படும் அதனுடைய சூழல் அமைப்பு, ஆசிரியர்களின் பங்களிப்போடு பொருந்தி வருவதால் மாணவர்களின் கற்றல் திறனில் தேர்ச்சித் தென்பட்டது, ஆனால் இதே சந்தர்ப்பம் இடைநிலைப்பள்ளிகளில் தட்டுப்படுவதால்தான் மேற்கண்ட சிக்கல்கள் சவால்களாகத் திகழ்கின்றன. மேலும், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்ப்பாடம் தமிழ் மாணவர்களுக்குக் கட்டாயப்பாடம் இல்லை என்பதாலும் மாணவர்கள் தமிழைத் தேர்வு பாடமாகக் கருதி படிக்கும் வாய்ப்பு இடம் பெறாமலே போய்விடுகிறது. இதன் விளைவால், மொழி திறன்களான கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேச்சு மற்றும் இலக்கண இலக்கிய கற்றல் போன்றவற்றில் புலமைப் பெறும் வாய்ப்பு பரிப்போகிறது. மேற்கூறிய சவால்கள் மாணவர்களுக்கு 'எழுதுதல்' மொழி திறனில் தேர்சி பெறுவதற்கு எவ்வாறு இடையூறாக இருக்கின்றன என்பதைத் தொடர்ந்து அறிவோம். மாணவர்களின் உதாசீனப் போக்கு அவர்கள் தமிழ் மொழியை வெறும் தேர்வுக்குப் படிக்கும் பாடமாகவும், திரைப்படம் மற்றும் பாடல்களைக் கேட்பதற்கும் மட்டுமே மேலோட்டமாகப் பயன்படுத்தத் தூண்டுகிறது. தமிழ் மொழியினைக் கலையறிவோடு அணுகும் முறையை அறிந்து கொள்ள தவறுகிறார்கள். இது இவ்வாறு ஏற்படுவதற்கு ஆசிரியர்களின் புல்லறிவும் ஒரு காரணம் என்றாலும் மாணவர்களின் அக்கரையின்மைதான் முதன்மை காரணியாகத் திகழ்கிறது. இந்த சவாலைக் களையும் முயற்சியாக மாணவர்களுக்குத் தேசிய கல்வி தத்துவத்தில் இடம்பெற்றுள்ள 5P கொள்கைகளைக் கடைப்பிடித்து மாணவர்களின் எழுதுதல் திறனைத் திட்பமாக்க முடியும். 5P-இல் முதன்மை வகிப்பது (penggabungjalinan) அதாவது ஒருங்கிணைப்பு. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழி திறன்களை ஒரே வேளையில் கையகப்படுத்துதல். எழுதுதல் திறனை மேம்படுத்த கட்டாயம் சொற்களஞ்சிய ஆளுமை இருக்க வேண்டும். ஆகவே, வாசித்தல் திறனை மெருகூட்டினால் மேம்பட்ட சொற்களஞ்சியம் நிச்சயமாக மாணவர்களின் எழுதுதல் திறனையும் செறிவுப்படுத்தும். அடுத்து, இணைப்பூட்டல் (penyerapan) அதாவது மற்ற பாடங்களில் இருக்கும் தகவல்களை மொழிப்பாடத்தில் சேருகை செய்வது. உதாரணத்திற்கு, புவியியல் பாடத்தில் கற்ற தகவல்களை இயற்கை பேரிடரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் எனும் கட்டுரை எழுதுவதற்குப் பேருதவியாக இருப்பதைப் போல பிற பாடம் தகவல்களை உள்வாங்கி மாணவர்கள் தங்கள் எழுதுதல் திறனை வளப்படுத்தலாம். மேலும், (pengayaan) செறிவூட்டல் மூலமாகவும் மாணவர்களின் எழுதுதல் திறனைத் துடர்ச்சியடைய செய்யலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உயர்தர கேள்விகளை வழங்கி கட்டுரையின் உள்ளடக்கங்களை நிறைவு செய்யும் பணியைக் கொடுக்கலாம்.  இதன்வழி மாணவர்கள் ஆய்ந்தறிதல் வழி கற்றல் அணுகுமுறை மூலம் மொழி கற்றலில் பரிய பயன் பெறுவார்கள். விடுப்பட்ட காலி இடங்களை நிரப்ப தகுந்த தரவுகளை ஆராய்ந்து; கொடுக்கப்பட்ட  எழுத்துப்பணியை நிறைவு செய்வர்.  இதனைத் தொடந்து, (pemulihan) மீட்டெடுத்தல் மூலமாகவும் மாணவர்களின் எழுத்து திறமையைத் திறல்படுத்த முடியும். இந்த கொள்கை பெரும்பாலும் கடைநிலை மாணவர்களுக்குப் பொருத்தமாக அமையும். எழுத்துச் செயல்முறையானது தானியங்கியாகச் செயல்பட வேண்டும்; இதற்கு மாணவர்களின் ஞாபக சக்தியைத் திறல்பட வைத்திருப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. ஏன்னென்றால், மாணவர்கள் இலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழை செய்வதிலிருந்து தடுக்க அந்த ஞாபகசக்தி உறுதுணையாக இருக்கும். இந்த திறமைகளைக் கையாளுவதில் சவாலை எதிர்நோக்குவதால்தான் கடைநிலை மாணவர்கள் எழுதுவதில் சிரமப்படுகிறார்கள் (“Misunderstood Minds. Writing Difficulties | PBS,” 2023). ஆகவே, மாணவர்களின் ஞாபக திறனை மேம்படுத்தும் கற்றல் முறையை மேற்கொள்வதன் வழி எழுதுதல் இயல்பைச் செழுப்படுத்த முடியும். இறுதியாக (penilaian) மதிப்பீடு கொள்கை மூலம் மாணவர்களின் எழுதுதல் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பின்வருமாறு கண்டறியலாம். வகுப்பறையில் நடைப்பெறும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின் அடைவுநிலையைக் கண்டறிவதை இந்த கொள்கை வழியுறுத்துகிறது. மேற்கூறிய நான்கு கொள்கைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் புரிதலைக் கண்டறிவதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் புரிதல் நிலையையும், தேர்ச்சி நிலையையும் அறிந்து கொள்ள முடியும். வகுப்பறையில் நடத்தப்படும் உருவாக்கம் மதிப்பீடுகள் (penilaian formatif) மூலம் அவற்றை ஆய்துகொள்ள முடியும். இதன்வழி சிறந்த அணுகுமுறைகளின் சேருகை மாணவர்களின் எழுதுதல் திறனை வளப்படுத்தும். இம்மாதிரி கொள்கைகள் மாணவர்களை மையமாகக் கொண்டு செயல்முறைபடுத்துவதால் ஆக்கப்பூர்வமான மற்றும் மாணவர்களின் இயல்போடு பொருந்தும் வகையில்  துவக்குகை செய்யக்கூடிய அணுகுமுறைகளை மேற்கொண்டு மேற்கண்ட கற்றல் சவால்களைக் களைக்க முடியும்.

லோசினி / LOSHNY SHARDESH KUMAR (17207285/2) எழுத்து திறன் குறிப்பாக கட்டுரை எழுதுதலில் உள்ள சவால்களைக் களைவதில் 5P கொள்கையின் பயன்பாடு.
மொழி என்பது வெறுமென ஒரு கருத்தாடல் சாதனமாக மட்டும் செயல்படாமல் ஓர் இனத்தின் அடையாளமாக விளங்குகின்றது. ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு உயரியச் சிந்தனைகளையும், போதனைகளையும், கலாச்சாரத்தையும் கொண்டு செல்ல மொழியே துணை புரிகின்றது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. அவ்வகையில், அம்மொழியை முறையாக கையகப்படுத்தினாலே அதன் சுவையையும் பயனையையும் ஒரு மனிதனால் முழுமையாக உள்வாங்க முடியும்.

ஆரம்பகாலம் தொட்டே,  மலேசியாவில் தமிழ்மொழியை போதிப்பதில்  பல இன்னல்களும் சவால்களும் இருந்து வருகின்றன. மலேசியாவில் தமிழ்க்கல்வி எதிர்நோக்கும் சவால்களை இரண்டு நிலைகளில் பார்க்கலாம். ஒன்று பொதுநிலை மற்றொருன்று அக்கல்வியை மாணவர்களிடம் போதிப்பதில் ஏற்படும் சிக்கல்கள். அவ்வகையில் இக்கட்டுரையில் இரண்டாம் நிலை சிக்கல் அதாவது மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியை போதிப்பதில் குறிப்பாக இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழியைப் போதிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் அடிப்படையில் அதனை எவ்வாறு கையாள்வது என கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டிய திறன்களாக கேட்டல்-பேச்சு, வாசிப்பு, எழுத்து, இலக்கணம் மற்றும் மொழியணிகள் அமைகின்றன. அவ்வகையில் இக்கட்டுரையில், எழுத்து திறனை எவ்வாறு விளைபயன்மிக்க முறையில் கொண்டு செல்லலாம் என விவரிக்கப்பட்டுள்ளது.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியை போதிப்பதில் ஏற்படும் முதன்மை சவால்களில் ஒன்று மாணவர்களுக்கு தாய்மொழியின் தேவை புரியாதிருத்தல். ஆரம்பப்பள்ளியில் முதல் தேர்வாக இருந்த தமிழ் மொழி இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் தேர்வாக மாறுகின்றது. எனவே மலாய், ஆங்கிலம் பாடங்களுக்கு வழங்கும் முன்னுரிமையை மாணவர்கள் தமிழ் மொழிக்குக் கொடுக்க தவறுகின்றனர். வெறுமென மதிப்பெண்களுக்காக தமிழ்க் கல்வியைக் கற்கின்றனர். தொடக்கப்பள்ளியில் தமிழ் மொழியினில் நல்ல தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் அதனை புறக்கணிப்பதைப் பார்ப்பதற்கு வேதனையாக இருக்கின்றது. அவ்வகையில் இது வெறுமென பேச்சு வழக்குகாகவும், திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மட்டும் பயன்படும் மொழி அல்ல என்பதனை ஒவ்வொரு மாணவனுக்கும் தெளிவித்து அதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசிரியர்கள் பெரும் பங்கினை வகிக்கின்றனர். இந்த நோக்கத்தை சரிவர செய்ய கற்றல் கற்பித்தலை சுவாரிசியமாக்கவதோடும், விளைபயன்மிக்கதாக மாற்றுவதற்கு பல கற்றல் அணுகுமுறைகளை பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அப்பொழுதுதான் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இம்மொழியில் தொடர்ந்து புலமை பெற முடியும்.

அவ்வகையில் 5P கொள்கை அடிப்படையில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் எவ்வாறு எழுத்து திறனை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் எனும் சில பரிந்துரைகளின் துளிகளே பின்வருமாறு. தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் இந்த 5P கொள்கை முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய கல்வித் தத்துவத்தில் ஒருங்கிணைத்த கருத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப இந்தக் கொள்கை அமைந்துள்ளது. ஒருங்கிணைப்பு (Penggabung jalinan), இணைப்பூட்டல் (Penyerapan), மதிப்பீடு (Penilaian), வளப்படுதுதல்/ மீட்டெடுத்தல்/மறுசீரமைப்பு (Pemulihan),  செறிவூட்டல் (Pengayaan) ஆகியவையே 5P கொள்கையாகும்.

இந்த 5P கொள்கையின் துணையோடு எவ்வாறு எழுத்து திறனை மாணவர்களுக்குப் போதிப்பது என்று தொடர்ந்து பார்ப்போம். இடைநிலைப்பள்ளி தமிழ் மொழி கலைத்திட்டத்தின் DSKP அடிப்படையில் எழுத்து திறன் வழி மாணவர்கள், ஏடல்கள், கருத்துக்கோடல்கள், தாங்கள் பெற்ற அனுபவங்கள், கற்றலின் வழியாக பெற்ற அறிவிப்புலம் ஆகியவற்றை வெளியிடுவர். இத்திறன்வழி மாணவர்கள் பல்வகை எழுத்து படிவங்களை குறிப்பெடுப்பர், படைப்புகளை உருவாக்குவர். கட்டுரை போதித்தலில் இந்த 5p கொள்கை உதவும்.

முதலில் ஒருங்கிணைப்பு வழி எவ்வாறு கட்டுரையை மாணவர்களுக்கு சுவாரிசியமாக போதிக்கலாம் என்று பார்க்கலாம். ஒருங்கிணப்பு என்பது வெவ்வெறு துறைகளின் மொழித் திறன் அல்லது ஒரே துறையில் காணப்படும் திறன்களை ஒரு போதனா முறையில் இணைத்து மாணவர்களுக்கு கற்றலை கொண்டு சேர்ப்பது. அவ்வகையில் கட்டுரை போதித்தலின் பொழுது வெறுமென ஒரு தலைப்பை வெண்பலகையில் எழுதி, மாணவர்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்வது விளைபயன்மிக்கதாக அமையாது. அவ்வகையில் ஒருங்கிணைப்பு சிந்தனையின் அடிப்படையில் கேட்டல், பேச்சு ஆகிய பிற திறன்களை கற்பித்தலில் ஈடுபடுத்தி கட்டுரை போதித்தலை சுவாரிசியமாக்கலாம். உதாரணத்திற்கு மாணவர்களுக்கு ஒரு கட்டுரை தலைப்பை வழங்கி அவர்களை குழுக்கள் வாரியாக அமர வைத்து, ஒவ்வொரு பத்திக்கான கருத்தை வகுத்து கொடுத்து அவர்களை சுயமாக பத்திக்கு இருக்க வேண்டிய 5 கூறுகள் அடிப்படையில் அதனை எழுதி படைக்க சொல்லலாம். பல்வேறு கருத்துக்களை பகிர்வது, கேட்பது மூலம் அவர்கள் சிந்தனை விரிவாக்கம் காண்பதோடு இது வகுப்பறையில் கற்றல் கற்பித்தலை சுவாரிசியமாக்கும்.

அதுமட்டுமல்லாமல் ஒலிமொழி அணுகுமுறையைப் பயன்படுத்தி கட்டுரை தலைப்புகளுக்கு ஏற்ற செய்திகளையோ, தூய தமிழில் உள்ள வசனங்களையோ மாணவர்களை செவிமடுக்க செய்து அதனை அவர்களை எழுத வைக்கலாம். இது அவர்களின் சொற்களஞ்சியத்தைப் பெருக்கு பேருதவியாக அமையும். கேட்டல் திறன் அடிப்படையில், Dictation எனப்படும் சொல்வதெழுதுதல் முறையைப் பயன்படுத்தி சிறு சிறு கட்டுரைகளை மாணவர்களுக்கு வாசித்து, அவர்களை எழுத வைக்கலாம். பிழையின்று எழுதுவோருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கலாம். இது மாணவர்கள் செய்யும் எழுத்துப்பிழைகளை களைய நல்ல உக்தியாக செயல்படும்.

அடுத்ததாக, இணைப்பூட்டல். இணைப்பூட்டல் எனப்படுவது குணாதிசயங்கள், வகைப்படுத்துதல், தொடர்புப்படுத்துதல், மற்றும் உறவுகளை உருவாக்கும் சிந்தனை திறன்களை ஊக்குவித்தல். கட்டுரை போதித்தலில் இது ஒரு நல்ல உக்தியாகும். கருத்து விளக்க கட்டுரை போன்ற கட்டுரைகளில் ஏதேனும் தலைப்புகளை எடுத்து அதை ஒட்டிய மாணவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். இக்கருத்துக்கள் யாவும் அவர்கள் அனுபவம், அவர்களோடு இணைத்துக் கொள்ள கூடிய வகையில் கேட்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழிமுறைகள் என வைத்து கொள்வோம், மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்கிறிரீகளா? உணவு கோபுரத்தை பட்டியலிடவும், கடைசியாக எப்பொழுது உடற்பயிற்சி செய்தீர்கள்? யோகா என்றால் என்ன என மாணவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை அனுபவங்களை இணைத்து பேச கூடிய வினாக்களை முன்வைத்தால் மாணவர்களின் சிந்தனைகளை நாம் விரிவாக்கம் செய்யலாம். இது பிற பாடங்களில் மாணவர்கள் கற்ற கல்வியை இவ்விடத்தில் பயன்படுத்தச் செய்கின்றது. உதாரணத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நலக்கல்வியில் கற்றதை இக்கட்டுரையில் பயன்படுத்துதல். அடுத்ததாக இணைப்பூட்டல் என பேசும்போது தமிழ் மொழியில் அவர்கள் கற்ற பழமொழிகள், திருக்குறள், உவமைத்தொடர்களைப் பயன்படுத்தி எவ்வாறு கட்டுரையை மெறுகூட்டலாம் என போதிக்க வேண்டும். இதை சுவாரிசியமாக்க மொழி விளையாட்டுகள் அடிப்படையில் போதிக்கலாம்.

தொடர்ந்து, மதிப்பீடு என்பது மிகவும் முக்கியமான ஒரு படிநிலையாகும். மாணவர்களின் அடைவு எவ்வாறு இருக்கின்றது, ஓர் ஆசிரியராக நாம் போதித்தது அவர்களுக்கு சரிவர சென்றிருக்கின்றது என்பதனை அவ்வப்போது சோதித்தால்தான் தகுந்தவாறு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த முடியும். அவ்வகையில் மதிப்பீடு இரண்டு நிலைகளில் பார்க்கப்படுகின்றது. ஒன்று வகுப்பறைகளிலான தொடர் மதிப்பீடு (Formatif). மற்றொன்று Sumatif எனப்படும் அரையாண்டு தேர்வையோ அல்லது இறுதியாண்டு தேர்வு, எஸ்.பி.எம் போன்ற தேர்வுகளை குறிக்கும். அவ்வகையில் இந்த தொடர் மதிப்பீடு என்பது மிக அவசியமாகின்றது. பெரியளவிளான தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் முன் தொடர்ந்து அவர்களை மதிபிட்டு, குறைகளை கண்டறிந்து, அதில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு வேறு அணுகுமுறைகளை கையாளலாம். அவ்வகையில் 21st Century Learningக்கு ஏற்ப மதிப்பீடுகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். உதாரணத்திற்கு கட்டுரை போதித்தலுக்கு பிறக்கு இணைய quiz அடிப்படையில் மாணவர்கள் அடைவுகளை மதிப்பிடலாம். அதோடு, மாணவர்கள் குழுக்கள் வாரியாக கட்டுரைகளை வகுப்பில் படைக்க செய்ய வேண்டும். அவர்கள் படைப்பு அடிப்படையில் பிற குழு மாணவர்கள் ஒரு Reflection செய்ய வேண்டும். பத்தி அமைப்பு சரியாக இருக்கின்றதா, கருத்துக்கள் கோர்வையாக வளங்கப்பட்டுள்ளனாவா என அவர்கள் மதிப்பிடுதலை அடிப்படையாக கொண்டும் நாம் மதிப்பிடலாம். மாணவர்களே சுயமாக தங்கள் அடைவுகளை மதிப்பிடும் பொழுது தங்கள் குறை நிறைகளை அடையாளம் காண வழி வகுக்கும்.

மறுசீரமைப்பு/ வளப்படுத்துதல்/ மீட்டெடுத்தல் 5Pக்களில் முக்கிய படியாகும். தொடர் மதீப்பீடு அடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் அடைவுக்கு ஏற்ப கற்றக் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும். ஒரு வகுப்பில் ஒரே மாதிரி அடைவு நிலையில் உள்ள மாணவர்கள் அமைய மாட்டார்கள். அவ்வகையில் அவர்களின் தேவைக்கேற்ப கற்றல் கற்பித்தலை மாற்றினால் மட்டுமே நோக்கத்தை அடைய முடியும். உதாரணத்திற்கு மிக எளிமையான ஒரு கட்டுரையை தொடர்ந்து வழங்கினால் முதல் நிலை மாணவர்கள் அதில் புதிதாக கற்பதற்கும் மேலும் தங்களை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு இருக்காது. அவ்வகையில் கட்டுவியம் அடிப்படையில் அவர்கள் எழுத்து திறனை மேம்படுத்த நடுத்தரம் மற்றும் உயர்நிலை சிந்தனைகளை அடிப்படையிலான கட்டுரைகளை வழங்க வேண்டும். கடைநிலை மாணவர்களையோ ஒரு கட்டுரையை மனனம் செய்து வர சொல்லலாம். இவ்வகை மாணவர்களுக்கு மனனம் என்பது நல்ல உக்தியாகும். மனனம் செய்த கட்டுரையை தங்கள் பானியில் இலகுவாக எழுத ஊக்குவிக்கலாம். இதன் அடிப்படையில் கடைசி படிநிலை செறிவூட்டலையும் ஆசிரியர்கல் செய்து விடலாம்.

இறுதியாக மொழி போதித்தல் என்பது ஒரு கலையாகும். வெறுமென மொழியை கருத்தாடலுக்குப் பயன்படுத்தினால் அது மொழி. ஆனால் சிந்தனை அறிவாக்கத்திற்காகவும், இலக்கியங்களை சுவைப்பதற்காகவும், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அனுபவம், முதர்ர்ச்சி சிந்தனைகளை கொண்டு செல்வது என்றால் அது மொழி கலையாகும். எனவே பல சவால்களுக்கு மத்தியில் இந்நாட்டில் அக்கலையை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றால், அதை கொண்டு சேர்க்கும் சிற்பிகளாக விளங்கும் ஆசிரியர்கள் விளைபயன்மிக்க கற்றலை உருவாக்க பல அணுகுமுறைகளை கையாள வேண்டி இருக்கின்றது. மாணவர்களுக்கு மொழி தேவையை தெரிவித்து தாய்மொழியைக் கற்பதில் உள்ள சுவாரிசயத்தை அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

அஸ்வினி கண்ணப்பன் / ASHWINI KANNAPPAN (17206281/2) சவால்: மாணவர்களிடம் தமிழ்ச் சொற்களஞ்சியங்களின் குறைபாட்டைக் களைவதில் 5P கொள்கையின் பயன்பாடு
1.0 முன்னுரை

மாணவர்கள் மத்தியில் தமிழ் சொற்களஞ்சியங்களின் குறைபாடு வாசிப்பு, கேட்டல், பேச்சு, எழுத்து ஆகிய அனைத்து திறன்களிலும் சிக்கலை விளைவித்து மாணவர்களுக்குத் தமிழ்க் கற்றலில் ஈடுப்பாடற்ற நிலைக்குக் காரணமாக அமைகிறது.வாசிப்பு மற்றும் கேட்டல் திறன் வாயிலாகவே ஒரு மொழியை உள்வாங்கிக் கொள்ளும் செயல்பாடு நிகழ்கிறது ஆனால் மாணவர்கள் தமிழ் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதைத் தவிர்ப்பதோடு தமிழ்ச் சார்ந்த நிகழ்ச்சிகளைக் காண்பதும் மிகக் குறைவு. எனவே, தமிழ் சொற்களஞ்சியங்களின் கற்றலில் குறைபாடு ஏற்படுகிறது. தொடர்ந்து, பேசுதல் மற்றும் எழுதுதல் வாயிலாகவே ஒரு மொழியை வெளிப்படுத்துதலானது நிகழ்கிறது அவ்வகையில் ஒரு மொழியை உள்வாங்குவது குறையும் வேளையில்  முக்கிய நான்கு திறன்களிலும் ஆளுமையற்ற நிலைப்பாடு மாணவர்கள் மத்தியில் மிகவும் சுலபமாக எழுந்துவிடுகிறது.  ஆகவே, தமிழ் மொழி கற்பித்தலில் மற்றும் கற்றல் உத்தியான 5P கொள்கையின் அடிப்படையில் இச்சவாலுக்கான தீர்வுகளைக் கண்டறிய உள்ளோம்.

2.0 5P கொள்கையின் அடிப்படையில் மாணவர்களிடம் தமிழ் சொற்களஞ்சியங்களின் குறைபாட்டைக் களைவது.

2.1 ஒருங்கிணைப்பு (Penggabungjalinan)

இரண்டுக்கும் மேற்பட்ட திறன்களை இணைத்து மாணவர்களுக்குப் பாடத்தைப் போதித்தல்.

1.     மொழியும் சிறப்பும் என்ற வாசிப்பு பகுதியை ஆசிரியர் தனது குரலில் ஒலிப்பதிவு செய்து மாணவர்களுக்கு வகுப்பில் திரவ படிக காட்சியின் (LCD) வாயிலாக ஒளிபரப்புதல். (கேட்டல் திறன்).

2.     ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு டெம்ப்பிளட்டை வழங்கி ஒலிப்பதிவில் கேட்டு பொருள் விளங்காத வார்த்தையை எழுத்துமாறு பணிதல். (எழுத்து திறன்)

3.     அவ்வாசிப்பு பகுதியை மாணவர்களை மறுபடியும் வாசிக்கச் செய்து மீண்டும் புலப்படாதச் சொற்களைக் குறிப்பெடுக்குமாறு பணிதல்.  (வாசிப்புத் திறன்)

4.    டெம்ப்பிளட்டில் எழுதிய வார்த்தைகளைச் சொல்லகராதியைக் கொண்டு இணையான மட்டும் பொருள் தேட மாணவர்களை ஊக்குவித்தல்.

5.    கண்டறியாத வார்த்தைகளைக் குழுவாக நண்பர்களுடன் இணைந்து அறிந்து கொள்ளும் நடவடிக்கை. (பேச்சு திறன்)

இப்படிநிலைகள் எவ்வாறு இச்சவாலுக்குத் தீர்வாக அமைகிறது என்றால் கேட்டல் மற்றும் வாசிப்பின்போது மாணவர்கள் புதியச் சொற்களஞ்சியங்கள் கற்றுக்கொள்ள இயல்கிறது. சான்றாக, தமிழ் இலக்கியம் பகுதியில் அச்சு ஊடகம், மின்னியல் ஊடகம், சஞ்சிகை போன்ற ஊடக மொழி சொற்களஞ்சியத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள இடமளிக்கிறது. மேலும், மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து சொல்லகராதியின் துணையுடன் விளங்காத ஒரு சொல்லுக்கு இணையான மற்றொரு சொற்களையும் பொருளையும் அறிந்து கொள்வதால் மாணவர்கள் மத்தியில் தமிழ் சொற்களஞ்சியங்கள் கற்றுக்கொள்ளும் ஆற்றல் வெகுவாக அதிகரிக்கக் கூடும். ஆசிரியர் வழங்கிய டெம்பிளட்டில் மாணவர்கள்  அறியாத சொற்களை சொல்லகராதி வாயிலாக அறிந்து கொண்டு அதற்கு இணையான சொற்களை அதில் நிரப்புவதின் வாயிலாக மாணவர்கள் மத்தியில் சொற்களஞ்சியம் அதிகரிப்பதை உறுதி செய்ய இயலும். கூடுதலாக, வாசிப்பின்போது ஆசிரியரால் மாணவர்களின் உச்சரிப்பு மற்றும் தொனியைச் சரி செய்ய இயலும்.

2.2 இணைப்பூட்டல் (Penyerapan)

உள்ளடக்கம் மற்றும் ஒருங்கிணைந்த மொழி கற்றல் போன்ற தோற்றம் உடையவை. தமிழ்மொழியுடன் பிற பாடத்தை அல்லது திறன்களை இணைத்து வழங்கும் வேளையில் மாணவர்களால் சுலபமாக கற்றலைப் புரிந்து கொள்ள இயலும்.

1.    மாணவர்கள் தங்களின் நண்பர்கள் கண்டறிந்த ஐந்து தமிழ்ச் சொற்களையும்  அதன் இணையான சொற்களையும் நடிப்பு, பாடல் மற்றும் வரைதல் ஆகிய திறன்கள் வாயிலாக வெளிப்படுத்துதல் (நடிப்பு, பாடல், வரைதல் போன்ற திறன்கள் மாணவர்களைச் சொற்களைக் கற்றுக்கொள்ள வழிகோலுகிறது).

2.  மாணவர்கள் கண்டறிந்து பொருள் உணர்ந்த 5 சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைக்க வலியுறுத்தல். (வாக்கியம் அமைத்தல் பயிற்சி).

இப்படிநிலையின் வாயிலாக மாணவர்கள் வீடு என்ற பதத்திற்கு இல்லம் என்று கண்டறியும்போது ஒரு புதியச் சொற்களை உள்வாங்குகிறார்கள். மேலும் சக நண்பர்கள் சொற்களை வகுப்பில் நடித்து, வரைந்து, பாடல் வாயிலாக புதியச் சொற்களின் பகிர்வுகள் வகுப்புகளில் நடைபெறும்போது அவை மாணவர்களின்  மனதில் நிலைப்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இடம்பெறுகின்றன. மேலும், அச்சொற்களை வைத்து எவ்வாறு வாக்கியம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனையையும் மாணவர்கள் மத்தியில் மிளிர்கிறது.

2.3 மதிப்பீடு (Penilaian)

மதிப்பீடு என்பது மாணவர்களின் புரிதலைச் சோதித்து பலவீனங்களைப் போக்குவதற்கான ஒரு படிநிலையாகும்.

1.    ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற தமிழ் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சியில் ஒரு சொல்லுக்கு இணையான மற்றொரு தமிழ்ச் சொல் கண்டறியப்படும். அதுபோன்று வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் போட்டிகளின் வாயிலாக மாணவர்களின் சொற்களஞ்சியத்தின் அடைவுநிலையைப் மதிப்பீடு செய்தல்.

2.    குறுக்கெழுத்து போட்டி நடத்துதல் – ஆசிரியர் மாணவர்கள் வகுப்பில் கற்றுக்கொடுத்த பல சொற்களைக் குறுக்கெழுத்து போட்டியாக மாணவர்களுக்கு வழங்கி மதிப்பீடு செய்தல்.

3.    சொற்களை வழங்கி அதற்கான இணையான சொல்லை எழுதப் பணிதலின் வாயிலாக மதிப்பீடு செய்தல்.

இதுபோன்ற மதிப்பீடு நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் புதிய உத்வேகத்தையும் புதியச்சொற்களைக் கற்றுக்கொண்டு நினைவு வைத்து போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற வேட்கையை அதிகரிக்கரிக்கிறது. அதன் வாயிலாக மாணவர்களின் அடைவு நிலையைக் கண்டறிய இயல்கிறது. மேலும், மாணவர்கள் போட்டியின்போது புதிய சொற்களஞ்சியத்தை உள்வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமைவதால் மேலும் பல புதியச் சொற்களஞ்சியங்களைக் கற்றுக் கொள்ள இயலும். போட்டி நடவடிக்கைகளில் அனைத்து மாணவர்களும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த இயலாது என்பதால் சொற்களை வழங்கி அதற்கான இணையான சொல்லை எழுதப் பணிதல் வாயிலாக அனைத்து மாணவர்களின் அடைவு நிலையைக் கண்டறிய உதவுகிறது.

2.4    வளப்படுத்துதல் (Pemulihan)

ஆசிரியர்கள் மாணவர்கள் மேற்கொள்ளும் தவற்றை அறிந்து, அவற்றை சரி செய்ய முயலும் படிநிலை.

சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுபடியும் அகராதி துணையுடனும் சொற்களஞ்சியங்களை எவ்வாறு நினைவில் நிறுத்துவது என்பதைக் கற்றுக்கொடுத்தல்.

2.5 செறிவூட்டல் (Pengayaan)

ஆசிரியர் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மேலும் சவாலான சொற்களை வழங்கி இணையான சொற்களையும் பொருளையும் வழங்கச் சொல்லுதல்.

3.0 முடிவுரை

தமிழ் மொழி கற்பித்தலில் மற்றும் கற்றல் உத்தியான 5P கொள்கையின் அடிப்படையில் சொற்களஞ்சியங்களின் குறைபாட்டை எவ்வாறு  களைவது என்பதை காண இயல்கிறதுச் நிச்சியமாக சொற்களஞ்சியத்தின் தேவை என்பது இன்றியமைதது. சொற்களுஞ்சியங்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் வேளையில் தமிழ் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எனவே, மேற்கண்ட தீர்வுகள் வாயிலாக மாணவர்கள் மத்தியில் சொற்களஞ்சியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இப்படிநிலைகள் உணர்த்தும்.

PAVITIRA A/P M.VELU (17170525)
மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு ஒரு தனி வரலாறு உண்டு. 1816-ஆம் ஆண்டு மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார் அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது. இதுவே மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்ட காலமாகும். தொடர்ந்து, இடைநிலைப்பள்ளிகளில் புதுமுக வகுப்பு தொடங்கி படிவம் ஐந்து வரையிலும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. பின், மூன்றாம் படிவத்தில் பிடி3 (PT3) தேர்விலும் ஐந்தாம் படிவத்தில் எஸ்.பி.எம் (SPM) தேர்விலும் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவும் தமிழ் விளங்குகின்றது. ஐந்தாம் படிவ மாணவர்கள் தமிழைத் தவிர்த்து தமிழ் இலக்கியத்தையும் தேர்வுப் பாடமாகப் பயிலும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலக்கட்டத்தில் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி பாடத்தை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குன்றிக்கொண்டே வருகிறது. இதற்கு முதன்மை காரணமாக விளங்குவது இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு கட்டாயப் பாடமாக இல்லாததுதான். எனவே, மாணவர்களும் தமிழ் மொழியின் பால் முக்கியத்துவம் அளிக்காமல் உதாசினப்படுத்துகின்றனர். இப்போக்கு நாளடைவில் மாணவர்களின் தமிழ் மொழியின் மேலுள்ள ஆர்வத்தையும் சிதைக்கின்றது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அவ்வகையில் இன்றைய மாணவர்கள் மொழித்திறன்களான கேட்டல்-பேச்சு, வாசிப்பு, எழுதுதல், இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். ஆக, ஆசிரியர்கள் மாணவர்களின் சிக்கல்களைக் களைய சில வழிமுறைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

முதலில், மாணவர்களின் தமிழ்க்கல்வி ஆர்வத்தை மேம்படுத்துவது மொழித்திறன்களை வளர்ப்பதற்கு இலகுவாக அமையும். மாணவர்கள் ஆர்வமின்றி இருக்கும் நிலையைக் கையாள சுவாரிசயமான செயல்முறையைக் கையாளுவது சாலச் சிறந்தது. தற்போதைய மாணவர்களின் நாட்டம் தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டில் அதிகம் காண முடிகிறது. எனவே, மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க தொழிற்நுட்பக் கருவிகளின் துணைக்கொண்டு கற்றல் கற்பித்தலை மேற்கொள்வது ஒரு சிறந்த வழிமுறையாகும். வகுப்பறைகளில் மாணவர்களின் ஈடுப்பாட்டை அதிகரிக்கத் தொழிற்நுட்ப சாதனங்களான கணினி போன்ற வசதிகளைப் பள்ளி நிறுவாகம் ஏற்படுத்தித் தருவது மாணவர்களின் அடைவு நிலைக்கு வித்தாக அமையும். அதுமட்டுமின்றி, மாணவர்களுக்குத் தொழிற்நுட்பம் வாயிலாகக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள 5P கருத்துருவின் துணைக்கொண்டு போதனாமுறையை வழிநடத்தவது விளைபயன்மிக்கதாக அமையும். இந்த 5P கொள்கையானது மாணவர்கள் கற்றல் கற்பித்தல் செயல்முறையில் முழுவதும் சலிப்படையாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் உத்தியாகத் திகழ்கிறது.

மேலும், 5P கருத்துரு படி மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிக்கரிப்பதைப் பற்றி பார்க்கலாம். முதலாவதாக, 5P கருத்துருகளில் ஒன்றான ஒருங்கிணைப்பு (penggabungjalinan) என்பது கற்றலின் தேவைகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட செயல்பாடுகளுடன் திறன்களை இணைப்பதாகும். உதாரணமாக, வகுப்பறையில் ஒளிவீச்சி மூலம் கதை ஒன்றை ஒளிப்பரப்பி அதிலிருந்து காணப்படும் மொழியணி கூறுகளைக் கண்டறியும் பயிற்சியைக் குழுவாரியாக மாணவர்களுக்கு வழங்கலாம். அதன் பின் கலந்துரையாடப்பட்ட கருத்துகளை ஒரு மாஜோங் தாளில் எழுதி வகுப்பில் படைக்க வைக்கலாம். இதன் மூலம், மாணவர்கள் கதையை ஆர்வத்தோடு கேட்டுச் சிந்திப்பதோடு அவர்களின் கேட்டல், எழுதுதல் மற்றும் பேச்சு திறனையும் வளர்த்தி கொள்ள இயலும். இது போன்ற குழு நடவடிக்கையில் ஈடுபவதால் மாணவர்களின் கற்கும் ஆர்வமும் உயரும். அதனை அடுத்து, இணைப்பூட்டல் (penyerapan) உத்தியானது தமிழ் பாடங்களின் உள்ளடக்கத்தில் பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட அறிவை உறிஞ்சுதலாகும். எடுத்துக்காட்டாக, வகுப்பில் குடும்பம் சார்ந்த ஒரு காணொளியை ஒலிப்பரப்பி மாணவர்களிடம் குடும்பம் எனும் ஒரு சொல் கட்டுரையை எழுத சொல்வதோடு ஒரு குழந்தையின் நல்ல பண்புநலன்களையும் கண்டறிய செய்யலாம். இதனால், மாணவர்கள் தங்களின் எழுத்தாற்றலை வெளிப்படுத்துவதோடு ஒரு நல்ல குழந்தைக்கு இருக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் தன்னுள் உள்வாங்கிக் கொள்வர்.

அடுத்ததாக, மதிப்பீடு (penilaian) எனும் கருத்துரு மாணவர்களின் அடைவு நிலையை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி. இதில் ஆசிரியர்கள் பயிற்சி அணுகுமுறையை மேற்கொண்டு மாணவர்களின் அடைவு நிலையைப் பரிசோதிக்கலாம். உதாரணமாக, ‘quizziz’ போன்ற செயலியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குச் சோதனை அல்லது புதிர்போட்டி வைக்கலாம். இதனால், மாணவர்களும் பாட வேளையில் கவனம் செலுத்திப் புதிர்போட்டியில் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பர். அதுமட்டுமல்லாது, மறுசீரமைப்பு (pemulihan) உத்தியின் மூலம் மாணவர்களின் திறன்கள், திறமைகள் மற்றும் ஆர்வங்களையும் வலுப்படுத்த முடியும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் திறன்களையும் கண்டறிந்த பின் அவர்கள் எத்திறனில் தேர்ச்சியடையாமால் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அவ்வகையில் ஒலிமொழி அணுகுமுறையின் வழி மாணவர்களின் பேச்சு மற்றும் கேட்கும் திறனை வலுப்படுத்தலாம்.

தொடர்ந்து, செறிவூட்டல் (pengayaan) என்பது மாணவர்களுக்கு ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு சுவாரஸ்யமான கற்றல் நடவடிக்கையாகும். மாணவர்கள் பணிகளை முடித்து சில அடிப்படை திறன்களை வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்களுக்குச் செறிவூட்டல் நடவடிக்கைகள் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் தங்களின் ஆர்வங்கள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப அறிவையும் அனுபவத்தையும் விரிவுபடுத்தலாம்.

சுறுக்கமாக, கற்றல் கற்பித்தலில் 5P கருத்துரு முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றல் கற்பித்தலில் இந்தக் கருத்துரு செயல்படுத்தப்படும் போது பல திறன்களை ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற இயலும். மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் சலிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி, ஆசிரியரால் மாணவர்களின் கேட்டல்-பேச்சு, வாசிப்பு, எழுதுதல், இலக்கணம் ஆகிய திறன்களின் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு கற்றல் சூழலை உருவாக்க முடியும்.

சாமளா மணியம் (17203514/2) தமிழ்மொழி வாசிப்புத் திறனிலுள்ள குறைப்பாட்டைக் களைவதில் 5P கொள்கையின் பயன்பாடு
மொழி என்பது மனித வாழ்வுக்கு ஒளி போன்றது. அவ்வொளியின்றி மனிதனால் எதையும் செய்ய இயலாது. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு உணர்த்தவும் பிறர் கருத்தை உணரவும் பயன்படுவது மொழியாகும். ஒரு கருத்தானது கேட்டோ, படித்தோ, பேசியோ, எழுதியோ உணரலாம். எனவே, கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகியன அடிப்படைத் திறன்களாக அமைகின்றன. ஒரு மொழியில் இந்நான்கு திறன்களையும் மாணவன் அடைந்தால்தான் அவன் அம்மொழியை முழுமையாகக் கற்றவனாவான். ஆனால், இன்றைய காலக்கட்ட மாணவர்கள் மொழி கற்பதில் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்மொழி கற்பதில் ஆர்வமின்மை நிலவுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. தமிழ்மொழி கற்பது என்பது பயனில்லாத ஒன்றாக மாணவர்கள் கருதுகின்றனர்.

ஆரம்பப்பள்ளியில் தமிழ்மொழியானது முதல் தேர்வாக இருந்ததால் அவர்கள் அப்பாடத்தை எடுத்து படித்தார்கள். ஆனால், இடைநிலைப்பள்ளிக்கு வந்த பிறகு தமிழ்மொழி பாடமானது அவர்களுக்குத் தேர்வுப் பாடமாக அமைகிறது. ஆகையால், தமிழில் அதீத பற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் இப்பாடத்தைத் தேர்வு செய்து பயில்கின்றனர். மற்றவர்கள் இப்பாடத்தைப் புறக்கணித்து விடுகின்றனர். மற்ற பாடங்களான மலாய், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க ஆரம்பித்து விடுகின்றனர். வேற்று மொழிக்குக் கொடுக்கும் முன்னுரிமை தமிழ்மொழிக்கு கொடுப்பதில்லை என்பதுதான் உண்மை. இதனால், மலேசியாவில் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியைப் போதிப்பதில் பல சிக்கல்களை ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். ஆரம்பக்கல்வியை முடித்து, இடைநிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களில் அதிகமானோர் வாசிப்புத் திறனில் சற்றுப் பின்தங்கியே உள்ளனர். இதுபோன்ற சிக்கலை மாணவர்கள் எதிர்கொள்வதனால் படிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். ஆக, தமிழ்மொழியைக் கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை சுவாரிசியமாகவும் பயன்மிக்கதாகவும் கொண்டு செல்ல சில அணுகுமுறைகளையும் உத்திகளையும் கையாளுகின்றனர். அவ்வகையில், கற்றல் கற்பித்தலிலுள்ள 5P கொள்கையின் அடிப்படையில் இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் இப்பகுதி அமைந்துள்ளது.

தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் இந்த 5P கொள்கை மிக முக்கியப் பங்காற்றுகின்றன. அவை, ஒருங்கிணைப்பு, இணைப்பூட்டல், மதிப்பீடு, வளப்படுத்துதல் மற்றும் செறிவூட்டல் ஆகும். இந்த 5P கொள்கையின் துணையோடு வாசிப்புத் திறனை எவ்வாறு மாணவர்களுக்குப் போதிக்கலாம் என்பதனைக் காண்போம். இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி கலைத்திட்டத்தின்கீழ் வாசிப்புத் திறன்வழி மாணவர்கள் வாசித்த பல்வேறு படிவங்களின் கருத்தைப் புரிந்துக் கொண்டு அதன் தொடர்பான விளைபயன்மிக்க கருத்துரை, மதிப்பீடு, பொருள்பெயர்ப்பு ஆகியவற்றை செய்வர். ஆக, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுலபமாக போதிப்பதற்கும் மாணவர்களின் கற்றல் திறன்களை வளர்ப்பதற்கும் இந்த 5P கொள்கை உதவும்.

முதலாவதாக, ஒருங்கிணைப்பு. ஆசிரியர்கள் வெறுமனே மாணவர்களுக்கு பாடப் புத்தகத்திலுள்ள பனுவல்களை வாசித்துக் காட்டி, அவர்களை வாசிக்க சொல்வது மட்டுமல்லாமல் இந்த ஒருங்கிணைப்பு சிந்தனையின் அடிப்படையில் கேட்டல், பேச்சு போன்ற பிற திறன்களையும் இணைத்து கற்பித்தலில் போதித்தால் மாணவர்களுக்குப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும். உதாரணத்திற்கு, இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழி வாசிப்புத் திறன்களோடு மேலும் மற்ற திறன்களையும் இணைத்து பாடத்தைப் போதிக்க வேண்டும். ஆசிரியர் ஒலிமொழியின் துணையோடு மாணவர்களுக்கு வாசிப்புப் பகுதியிலுள்ள வசனங்கள், உரையாடல்கள் போன்ற ஒலிப்பதிவுகளைக் கேட்க செய்ய வேண்டும். அப்பதிவுகளில் இடம்பெற்றுள்ள சரியான தொனி, உச்சரிப்புகளைக் கண்டறிந்து அதுபோல மாணவர்கள் உச்சரிக்க முற்பட வேண்டும். ஒலிப்பதிவில் கேட்டவாரே மீண்டும் அவர்கள் சரியான தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிக்கேற்ப வாசிக்க வேண்டும். சரியாக உச்சரிக்கும் மாணவர்களுக்கு வெகுமதிகளையளித்து மகிழ்விக்கலாம். இதன்மூலம், மாணவர்கள் பிழையின்றி உச்சரிக்க உதவுவதோடு கற்றல் கற்பித்தலை சுவாரிசியமாக்கவும் உதவுகின்றது.

அடுத்ததாக, இணைப்பூட்டல். தமிழ்மொழிப் பாடத்துடன் பிற பாடத்தையும் அல்லது பிற திறன்களையும் இணைத்து கற்றுக் கொடுப்பதால் மாணவர்களால் சுலபமாக கற்றலைப் புரிந்து கொள்ள முடிகின்றது. எடுத்துக்காட்டாக, புவியியல் பாடத்தில் கற்ற இயற்கை மாசுபாடு தொடர்பான கருத்துகளையும் தமிழ்மொழியில் காணப்படும் இயற்கையை நேசிப்போம் என்ற படிவத்தை வாசித்து அதிலுள்ள கருத்துகளையும் எடுத்து கொண்டு இயற்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்கின்றது. மாணவர்கள் ஏட்டுக் கல்விக்காக மட்டும் பயிலாமல் அதனை தங்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதற்கு வாசிப்பு மிகவும் உதவுகின்றது. அதுமட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மானவர்களைக் குழு வாரியாகப் பிரித்து ஓர் உரையாடல் கொடுத்து சரியான தொனி, உச்சரிப்புடன் வாசிக்க சொல்ல வேண்டும். வெறுமனே வாசிப்பது போல் இல்லாமல் அவ்வுரையாடலுக்கேற்ப நடித்துக் கொண்டே வாசிக்க வைக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் தங்கள் உடலசைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் சரியாக வாசிப்பர்.

தொடர்ந்து, மதிப்பீடு. வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்முறையைப் பின்பற்றுவதில் மாணவர்களின் பலவீனங்கள் போக்குவதாகும். சரியான வேகம், தொனி, உச்சரிப்பு குறிப்பாக லகர, ழகர, ளகர உச்சரிப்புடன் வாசிக்கும் மாணவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற மதிப்பீடு நடவடிக்கையானது மாணவர்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதோடு ஆசிரியரிடம் எப்படியாவது பரிசை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களைச் சரியாக வாசிக்க உதவி செய்யும். ஒரு வகுப்பில் ஒரே மாதிரி அடைவு நிலையிலுள்ள மாணவர்கள் இருக்க மாட்டார்கள். ஆக, அவர்களுக்கேற்ப படிவங்களைத் தாயர் செய்து கொடுத்து அதனை வாசிக்க சொல்ல வேண்டும்.

மேலும், வளப்படுத்துதல். கற்ற கற்பித்தலில் மாணவர்கள் மேற்கொள்ளும் தவற்றையறிந்து ஆசிரியர் அவற்றை சரிச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒலி வேறுபாடு கொண்ட எழுத்துகளான லகர, ழகர, ளகர உச்சரிப்பு எழுத்துகளை உச்சரிக்கும் பொழுதே சரியாக உச்சரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். அதனை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதனை ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு மாணவனையும் தனித் தனியாகப் பேச வைத்து, வாசிக்க வைத்துக் கற்றுக் கொடுத்தால், உச்சரிப்பு பிழை நிச்சயமாக வராது. தவறான உச்சரிப்பு வழி தவறான பொருளைத் தருகின்றது என்பதை முதலில் மாணவர்களுக்கு ஆசிரியர் புரிய வைக்க வேண்டும்.

கற்றல் கற்பித்தலில் இறுதி படிநிலையாகத் திகழ்வது செறிவூட்டல். எதிர்பார்த்த நேரத்திலிருந்ந்து ஆரம்பக் கற்றல் முடிவுகளை அடைந்த மாணவர்களுக்கு மிகவும் சவாலான செயல்களைச் செய்வது போன்றதாகும். உதாரணத்திற்கு, மாணவர்களின் அடைவு நிலைக்கேற்ப ஆசிரியர்கள் படிவங்களைக் கொடுத்து அவ்வாசிப்பில் வெளிப்படும் வேகம், தொனி, உச்சரிப்பு ஆகிய இடங்களை ஆய்ந்து கூற சொல்லுதல். அதோடு, லகர, ளகர, ழகர; னகர, ணகர; றகர, ரகரச் சொற்களைப் பட்டியலிட்டுச் சரியான உச்சரிப்புடன் உரக்க வாசிக்கக் கூறுதல்.

முடிவாக, கற்றல் கற்பித்தலில் 5P கொள்கைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இந்தக் கொள்கையை வகுப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் மாணவர்களிடம் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வுக் காண உதவுகிறது. வாசிப்புத் திறன் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் வேளையில் தமிழ் மொழியின் மீதான ஈடுபாடும் பற்றும் அதிகரிக்கும். மாணவர்கள் மத்தியில் வாசிப்புத் திறன் குறைந்து வரும் வேளையில் இந்த 5P கொள்கைகள் மூலம் மாணவர்களிடையே வாசிப்பை அதிகரிக்கலாம்.

மொழி கற்பித்தலின் காணப்படும் நான்கு திறன்களையும் உள்ள சவால்களைக் களைவதில் 5P கொள்கையின் பங்கு. (துர்காஷினி த/பெ மணிமாறன்)-17206817/2

தமிழ்மொழி கற்பித்தலில் காணப்படும் எழுத்து திறனில் உள்ள சவால்களைக் களைவதில் 5P கொள்கையின் பயன்பாடு (வித்தியா த/பெ ஆறுமுகம் -17186370)
மொழி என்பது மனிதனுக்கு ஈன்றி அமையாத ஒன்றாக அமைவது மட்டுமில்லாமல் அவனது வாழ்க்கை முழுவதும் பயணிக்கும் சிறப்புடையதாகும். மொழியின் துணைக்கொண்டே மனிதனால் தனது எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளவும் தனது தேவைகளை கேட்டுப் பெற்றுக்  கொள்ளவும் ஏதுவாக இருக்கிறது. மொழி என்பது மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்கிறது  என்றால் அது மிகையாகாது.

தாய்மொழி என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் ஆதி முதல் அந்தம் வரையில் அவனுடன் பயணிக்கின்ற ஒன்றாகும். மலேசிய இந்தியர்களின் தாய்மொழியான தமிழ்மொழி பாடத்தையை ஆரம்பப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் காலடி  எடுத்து வைத்தப் பின்னர் புறக்கணிக்கும் அவலம் இன்றளவும் நிலவி வருவது பெரும் வேதனையை அளிக்கிறது. இதற்கு பலக் காரணங்கள் பரவலாகக் கூறப்பட்டு வந்தாலும் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக இல்லாது முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது. தமிழ்மொழி பாடத்தை மாணவர்கள் விரும்பி தேர்வு செய்து பயிலும் பாடமாக மட்டுமே  இருப்பதால்  தமிழ்மொழியில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் மற்றும் சுலபமாக இப்பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெறலாம் எனும் நோக்கத்தை கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்மொழியை இடைநிலைப் பள்ளிகளில் தேர்வுக்காக எடுத்துப் பயில்கின்றனர். இதன் காரணமாக மொழித்திறன்களான கேட்டல்-பேச்சு, வாசிப்பு, எழுதுதல், இலக்கண பயன்பாடு ஆகியவற்றில் பின் தங்கியர்களாக இருக்கின்றனர்.  மேலும் தமிழ்மொழியினை முழுமையாக கைவசப்படுத்த முடியாமல் திண்டாடுவது இக்கால கட்ட இந்திய மாணவர்கள் எதிர்நோக்கும் மற்றும் ஒரு சவாலாக உள்ளது. தமிழ்மொழியில் உள்ள மொழித்திறன்களில் எழுத்து என்பது மிகவும் முக்கியமானது ஆகும். மொழியின் ஆளுமை பலவினமாக இருப்பதால், மேலும் போதுமான சொற்களஞ்சியம் இல்லாததால் எழுதுவதில் மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். இதனால் அவர்கள் தமிழ் மொழிப் பாடத்தில் சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கு இவை முட்டுக்கட்டையாக இருக்கிறது.

இந்நிலையை சரி செய்ய சிறப்பான செயல்முறையை கையாளுவது அவசியமாகும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், பயன்படும் வகையிலும் கற்றல் கற்பித்தலை வழங்க வேண்டும். கற்றல் திறன்களுக்கு ஏற்ற வகையில் அணுகுமுறையையும் உத்திகளையும் கையால்வது அவசியமாகும். கற்றல் கற்பித்தலில் இடம்பெற்றுள்ள 5P  கொள்கையின் துணைக்கொண்டு, சுவாரசியமாக கற்றல் கற்பித்தலை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்குவது இப்பிரச்சனைக்கு சிறப்பு தீர்வாக அமையும் என்பது திண்ணம். இந்த 5P வழி ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலின் நோக்கத்தை  அடையவும் மாணவர்கள் தங்களது கற்றல் திறன்களை மேலும் செம்மையாக்க இஃது துணை நிற்கும். அவற்றில் முதலாவது ஒருங்கிணைப்பு (penggabungjalin). ஒருங்கிணைப்பு என்பது கற்றல் கற்பித்தலில் ஒன்றுக்கு மேம்பட்ட திறன்களை இணைப்பதாகும். உதாரணத்திற்கு மாணவர்களுக்கு வாத மற்றும் விவாதக் கட்டுரை எழுத  தயார் செய்வதற்கு முன் இத்தலைப்பை ஒட்டிய கலந்துரையாடலை  குழு முறையில் செய்யலாம். இத்தலைப்பை ஒரு சிறிய பட்டிமன்றம் போல் செய்து அவர்களை பேச வைக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் பேச்சுத்திறன் மேம்படுவதோடு மாணவர்களிடையே புதிய உற்சாகத்தை உருவாக்கி பாடத்தில் முழு கவனத்தை செலுத்த வைக்க  முடியும். இந்த 5P கொள்கையில் இரண்டாவதாக வருவது இணைப்பூட்டல் (penyerapan) ஆகும். இது உள்ளடக்கம் மற்றும் ஒருங்கிணைந்த மொழி கற்றல் போன்றது. தமிழ்மொழியுடன் பிற பாடத்தை அல்லது திறன்களை இணைத்து வழங்குவது கற்றல் கற்பித்தலை மேலும் சிறப்பாக்கும். உதாரணத்திற்கு படிவம் 1 மாணவர்களுக்கு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் பாட நூலில் உள்ள பாழமொழியை போதனை செய்யும் பொழுது இதனுடன் ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் சத்தான உணவு வகைகள் உட்கொள்வதன் மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான விளிப்புணர்வினை ஏற்படுத்தலாம். 5P கோட்பாட்டில் மூன்றாவதாக உள்ளது மதிப்பீடு (Penilaian). மதிப்பீடு செய்வது என்பது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் புரிதல் நிலையை சோதித்து அவர்களின் பலவீனங்களை அறிந்து அதனை களைய ஆசிரியர் உதவி செய்வதாகும். இந்நிலையில் ஆசிரியர் மாணவர்களின் புரிதலை முழுமையாக அறிய அவர்களுக்கு உயர்நிலை கேள்விகளை வழங்கலாம். மாணவர்களை குழு முறையில் அமர்த்தி கொடுக்கப்பட்ட கட்டுரைக்கு எற்ற கருத்து, துணைக்கருத்து மற்றும் எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றை ஒரு பத்தி அடிப்படையில் தயார் செய்து அதனை வகுப்பு முன் படைக்கச் செய்து அதன் மூலம் மாணவர்களின் புரிதலை மதிப்பீடு செய்யலாம். இக்கொள்கையில் அடுத்து வருவது வளப்படுத்துதல் (pemulihan) ஆகும். இந்நிலையில் ஆசிரியர்கள் மாணவர்கள் மேற்கொள்ளும் தவற்றை அறிந்து, அவற்றை சரி செய்ய முயற்சி செய்வதாகும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் திறன்களையும் கண்டறிந்த பின் அவர்கள் எந்த திறனில் தேர்ச்சியடையாமல் பின் தங்குகின்றனர் என்பதனை அறிந்து அதற்கு ஏற்ப முயற்சி மேற்கொள்ளலாம். இந்நிலையில் எழுதுதல் திறனை மேம்படுத்துவதற்கு நல்ல சொற்களஞ்சியம் அவசியம். மாணவர்கள் நல்ல சொற்களஞ்சியத்தை மேம்படுத்தும்  வகையில் வாசிப்புப் பழக்கத்தை வலியுறுத்தி கூடுதல் பயிற்சிகளை வழங்கலாம். இதன் முலம் அவர்களின் எழுதுதல் திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். இந்த 5P கொள்கையில் இறுதியாக வருவது செறிவூட்டல் (pengayaan) ஆகும். மாணவர்கள் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவம் வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நடவடிக்கை ஆகும். மாணவர்கள் தங்களது பணிகளை முடித்து சில அடிப்படை திறன்களை வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்களுக்கு இந்நடவடிக்கை வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக மாணவர்கள் கூடுதல் தகவல் பெரும் பொருட்டு, கூடுதல் வாசிப்புகளை வழங்குவது இந்த கொள்கைக்கு ஏற்புடையதாக இருக்கும்.

தேசியக் கல்வி தத்துவத்தின் கீழ் இடம்பெற்றுள்ள இந்த 5P என்னும் கொள்கையினை ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துவது மட்டுமில்லாமல் கற்றல் திறனுக்கு எற்ற வகையில் சிறப்பான மற்றும் பொருத்தமான உக்திகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துவதன் வழி மாணவர்கள் எழுதுதல் திறனிலும் மேலோங்கி சிறந்து விளங்குவர். இதன்வழி தமிழ்மொழி பாடத்தை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் மற்றும் தமிழ் மொழி பாடத்தின் தேர்ச்சி சதவிகிதமும் முன்னேற்றம் அடையும் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

கேட்டல் – பேச்சு திறனை மேம்படுத்துவதற்கு 5P கொள்கைகளின் செயல்பாடுகள் (செளந்தரியா சிவம் - 17154343)

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் காணப்படும் எழுத்துத் திறனில் உள்ள சவால்களைக் களைவதில் 5P கொள்கையின் பயன்பாடு (மீனாம்பிகை த/பெ நாராயணசாமி - 17055325)

தமிழ்மொழி கற்பித்தலில் காணப்படும் எழுத்து திறனில் உள்ள சவால்களைக் களைவதில் 5 (P) கொள்கையின் பயன்பாடு (நாகேஸ்வரி குணசேகரன்- 17152151/2)
தமிழ்மொழி கற்பித்தலில் பல சவால்களை ஆசிரியர்கள் எதிர்நோக்குகிறார் என்ற கூற்றை மறுக்க இயலாது. குறிப்பாக, எழுத்து திறனில் உண்டாகும் சவால்களைக் களைவதில் 5(P) கொள்கையின் பயன்பாடு அவசியம். அவை ஒருங்கிணைப்பு, இணைப்பூட்டல், மதிப்பீடு, மீட்பு மற்றும் செறிவூட்டல். 5(P) கொள்கை மாணவர்கள் தூண்டுதலில் உள்ள தகவலைச் சரிசெய்து ஒரு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான பாடத்தை தயார் செய்யலாம்.

ஒருங்கிணைப்பு

எழுத்து திறனை மையப்படுத்தித் திட்டமிடல் செய்யப்படுகிறது. மாணவர்களின் திறன்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இதனால், பல திறன்களை ஒரே நேரத்தில் தேர்ச்சி பெறலாம்.

இணைப்பூட்டல்

இணைப்பூட்டல் சிந்தனைத் திறன்களான குணாதிசயங்கள், வகைப்படுத்துதல், தொடர்புகள் மற்றும் உறவுகளை உருவாக்குதல் ஆகும். நான்கு திறன்களையும் இணையாக உள்வாங்கப்படுகிறது. கற்பித்தலில் கற்றல் விளைவுகளுக்கு ஏற்ற மதிப்பு கூட்டப்பட்ட எழுத்து திறனை உள்வாங்குதல்.

மதிப்பீடு

மதிப்பீடு என்பது மாணவர்களின் சாதனை அளவை அறிந்து கொள்வது. அவ்வகையில், எழுத்து திறனை மாணவர்கள் தங்கள் எழுத்து படைப்பு வாயிலாக படைக்கும் போது அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால், மாணவர்களின் நிலையை அறிவதோடு மென்மேலும், எழுத்து திறனில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் களையலாம்.

மீட்டெடுத்தல்

மீட்டெடுத்தல் பகுதியில் ஆசிரியர்கள் மாணவர்களின் எழுத்து திறனை வலுப்படுத்தலாம். மாணவர்களின் திறமைக்கேற்ப ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் அல்லது தனியாக செறிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

செறிவூட்டல்

செறியூட்டல் செயல்பாடுகள் வாயிலாக, எதிர்பார்த்த நேரத்தில் இருந்து ஆரம்பக் கற்றல் முடிவுகளை அடைந்த மாணவர்களுக்கு மிகவும் சவாலான செய்களைத் தயார் செய்து அவர்களின்  திறனின் அடைவு நிலைக்கு ஏற்ப தரலாம்.

மொழி கற்பித்தலில் காணப்படும் வாசிப்பு திறனில் உள்ள சவால்களைக் களைவதில் 5 (P) கொள்கையின் பயன்பாடு (பவியா சோமசுந்தரம்)
வாசிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது. பள்ளி அளவில் வாசிப்பு திறன் மிக முக்கியமான திறனாக கருதப்படுகிறது. வாசிப்பு திறன் மாணவர்களின் சிந்தனை ஆற்றலையும் தேடலையும் பெருக்குவதாகும். இருப்பினும், மாணவர்களின் வாசிப்பு திறனில் பல சிக்கல்கள் எழுகின்றன.எடுத்துக்காட்டாக, தொணி, சரளத்தன்மை, உச்சரிப்பு, நடை ஆகியவையாகும். அதனை களையெடுக்க 5 (P) கொள்கையின் பயன்பாடு அவசியமாகிறது.

I.          ஒருங்கிணைப்பு

மாணவர்களுக்கு நல்ல கருத்துக்கோர்வை கொண்ட பனுவல்களை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். நல்ல கருத்தாடல் கொண்ட பனுவலில் சிக்கலான வாக்கியங்கள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. இதனால், இது மாணவர்களின் புரிதலுக்கு தலையாக அமையாது. மேலும், அவ்வாறான பனுவலில் கருத்துகளை ஒன்றை மர்றும் சார்ந்து அமையாது பறந்த சிந்தனையை விதக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

II.          இணைப்பூட்டல்

மாணவர்களுக்கு வழங்கப்படும் வாசிப்பு பகுதியின் கருத்துகளை கலந்துரையாடும் பொழுது அவர்களின் பேச்சு திறனும் வெளிபடுகிறது. அதாவது, மாணவர்கள் தாங்கள் படித்த பனுவலின் முக்கியக் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது அதனை பிறர் மறுத்து பேசும் பொழுதும் விவாத திறன் அதிகரிக்கரது. மாணவர்களின் தோணி, உச்சரிப்பு வாசிப்பில் மட்டும்மின்றி உரையாடலிலும் திருத்த முடியும்.

III.          மதீப்பீடு

ஆசிரியர் மாணவர்களின் வாசிப்பு திறனை மதீப்பீடு செய்ய அவர்களை உரக்க வாசிக்க செய்யலாம். உரக்க வாசிக்கும் பொழுது அவர்கள் செய்யும் பிழையைத் தானே அறிய முடியும் மேலும் ஆசிரியர் உடனுக்குடன் திருத்த முடியும். உச்சரிப்பு பிழைகளைக் களைய ஆசிரியர் நாபிறழ் பயிற்சிகளை வழங்கலாம். மேலும், ஆசிரியர் ஒவ்வொரு மதீப்பீட்டிலும் மாணவர்களுக்கான மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உதரணத்திற்கு, புலனத்தில் இணைய நூலகத்தை உருவாக்கி, நல்ல வாசிப்பு பகுதியைக் குரல் பதிவோடு பகிர்தல். மாணவர்கள் அதனை கேட்டு, சுயமாக வாசிக்க வேண்டும், அதனை சக நண்பர்களைச் சரி பார்க்க செய்தல்.

IV.          மறுசீரமைப்பு

மாணவர்கள் செய்யும் பிழைகளைத் திருத்த தொடர் முயற்சிகளை எடுத்தல். மாணவர்களுக்கு வாசிப்பு நடையைத் திருத்தம் செய்ய நல்ல தமிழ் செய்தியாளர்களின் செய்தி வாசிப்புகளை முன் மாதிரியாக வழங்குதல். கதைகளை அதன் நடையோடு வாசிக்க நல்ல குரல் பதிவு கொண்ட நாடக கதைகளை அறிமுகம் செய்தல்.

V.          செறிவூட்டல்

மாணவர்களின் அடைநிலையைத் தொடர்ந்து கவனித்து செயல்படுத்தல். சிறிய தவறாக இருந்தாலும் அதனை திருத்தம் செய்ய வேண்டும். அதே வேளையில், நல்ல படைப்புகளையும் பாராட்ட வேண்டும்.

ஆகவே, மேற்காணும் செயல்முறைகளின் வழி மாணவர்களிடம் காணப்படும் வாசிப்பு திறன் சிக்கல்களைக் களைய முடியும்.