AIH2001-4 by Mohana Dass Ramasamy

SUGANYAA A/P MOHAN
மொழி என்பது தொடராக அமைந்து சுயக்கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் தொடர்புச் சாதனம், திட்டமிடப்பட்டு உருவாக்கப்படாத தன்னிச்சைச் சாதனம், தோன்றா உருவிலாப் பொருளுடை ஒலிச்சாதனம், அற்புதமான கருத்துப் பரிமாற்றச்சாதனம், மனிதனது செயல்பாட்டுத் திறனின் வெகுமதி என அதன் சிறப்புகளை கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.

ROSHINI A/P RAVEENTHARAN
மனிதனும் மிருகங்களும் ஓசையின் வாயிலாகவும் சைகைகளின் வாயிலாகவும் பிறவற்றோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறனர். மனிதனது தொடர்புமுறை மொழி எனப்படும் பொருள் பொதிந்த ஓசை வடிவிலான இவை எழுத்து அமைப்புகளை உருமாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. மாறாக மிருகங்களின் தொடர்பு முறையோ வெறுமனே ஓசையாலும் சைகையாலும் மட்டுமே நிறுவப்படுகிறது.

MAVITTHRAN A/L KRISHNAN
ஒரு சமுதாயத்தைச் சார்ந்த  மக்கள் தங்கள் கருத்துகளைப் பிறரோடு பரிமாற்றம் செய்துக்கொள்ளப் படைத்துக்கொண்ட சாதனம் மொழியாகும். மொழி அந்தந்த சமுதாயத்தின் படைப்பாகும். மொழி என்பது மனிதனது சிந்தனை முதிர்ச்சியின் அனுபவ வெளிப்பாடு என்பது அரிஸ்டாட்டில் வாதமாகும். மனிதனது ஆக்கப்பூர்வமான படைப்பாற்றல் வழி படைக்கப்பட்ட உன்னதமான கருத்துபரிமாற்றச் சாதனங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்த கருவி மொழியாகும்.

PREM RAJ A/L PICHAMUTHU
மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை, கருத்துகளை, ஆசைகளை, சிந்தனைகளை பொருளுடைய ஒலி வடிவங்களாக மொழியின் வாயிலாகத்தான் பிறருக்குத் தெரிவிக்க முடியும். அவ்வகையில், மொழியானது முதலில் பேச்சு மொழியாக உருவாகிப் பிறகு எழுத்து மொழியாக வளர்ச்சி கண்டது. இவ்விரண்டில் பேச்சுமொழியே மனிதனின் உயிர்நாடியாக விளங்குகிறது.