Bible Reading Campaign Tamil by Bible reading Campaign

Praise the Lord!!

Till I come, give attention to reading, to exhortation, to doctrine.
-1 Timothy 4:13

அன்பு❤️!!
அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
[1 யோவான் 4:8]

1 கொரிந்தியர் 13 ம் அதிகாரம் வேதாகமத்தின் "அன்பு அதிகாரம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்நிருபத்தை கொரிந்து சபையாருக்கு அப்போஸ்தலனாகிய பவுல்  எழுதுகிறார். முதலாம் அதிகாரத்தில் பவுல் கூறுகையில் கொரிந்து சபையானது எல்லா உபதேசத்திலும், அறிவிலும், கிருபையிலும், யாதொரு வரத்திலும் குறைவில்லாததாய் இருப்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்நிலையில் சபையில் ஏற்பட்டிருக்கிற  பிரிவுகள், பிரச்சனைகளை அறிந்த பவுல் இந்நிருபத்தை அவர்களுக்கு எழுதுகிறார். இதில் 13 ம் அதிகாரத்தில் பவுல் அன்பை குறித்து விவரிக்கிறார்.

கிரேக்கத்தில் அன்பு என்பதற்கு  பல வார்த்தைகளை உபயோகிப்பார்கள். இதில் பவுல் அகாபே என்கிற ஒரு கிரேக்க  வார்த்தையை பயன்படுத்துகிறார். அகாபே என்ற வார்த்தைக்கு நிபந்தனையற்ற அன்பு, அன்பின் உயர்ந்த வடிவம் மற்றும் மனிதனின் மீது கடவுளின் அன்பு என்று அர்த்தமாம். அந்த அன்பை நாம் பாவிகளாய் இருக்கும் போது கிறிஸ்து  நமக்காக மரித்து அதை  நமக்கு விளங்கப்பண்ணினார்.

பவுல் கூறும் போது தன்னிடத்தில் எல்லா வரங்கள், அறிவு, நற்செயல்கள் இருந்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை என்கிறார். அன்பு எல்லா பாவங்களையும் மூடும்,‌ எல்லாவற்றையும் சகிக்கும். ஆம், அந்த நிறைவான அன்பு நமக்குள் வரும்போது குறைவானது எல்லாம் ஒழிந்துப்போகும்.

தேவன் அன்பாகவே இருக்கிறார்!!

அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வேதம் கூறுகிறது. தேவ பிள்ளைகளாகிய நாம் எப்பொழுதும் எல்லா இடத்திலும் அந்த அன்பை (தேவனை) வெளிப்படுத்த வேண்டும். தேவன் நம்மிடத்தில் முந்தி அன்புகூர்ந்தது போல நாமும் மற்றவரிடத்தில் அன்பு கூருவோம். ஆமென்!

📖 *BIBLE BEFORE BROWSE* 📖

மனந்திரும்புதல்
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
[சங்கீதம் 51:1]

தாவீது இஸ்ரவேலின் மிகப் பெரிய ராஜா. ஆடு மேய்த்து கொண்டிருந்த இந்த தாவீதை தேவன் அரசனாக மாற்றி அநேக‌ ஆசீர்வாங்களை கொடுத்திருந்தார். தேவனால் "தன்‌ இருதயத்திற்கு ‌ஏற்றவன்" என்று சொல்லப்பட்டவன். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல தாவீது மிகப்பெரிய மரணத்திற்கு ஏதுவான  பாவத்தை செய்து விட்டார். தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பி தாவீதுக்கு அவனுடைய பாவத்தை உணர்த்தினார். தாவீது இஸ்ரவேலின் ராஜா, அவன் ‌நினைத்திருந்தால் அந்த தீர்க்கதரிசியின் தலையை கொய்திருக்கலாம். ஆனால் தாவீது அப்படி செய்யாமல் "நான் ‌கர்த்தருக்கு‌ விரோதமாக பாவம் செய்தேன்" என்று ‌ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.

ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க சங்கீதமாகப் பாடியது தான்‌ இந்த 51ஆம் சங்கீதம். நாம் பல தவறுகளை ‌நம் வாழ்க்கையில் ‌செய்கிறோம். பாவம் செய்யாத மனிதர்கள் என்று இந்த ‌உலகத்தில் எவருமே இல்லை. "எல்லாரும் பாவம் செய்து ‌தேவ‌ மகிமையற்றவர்களாகி" என்று வசனம் சொல்லுகிறது. பாவம் செய்வது மனித‌ இயல்பு தான், ஆனால் எத்தனை பேர் தாவீதைப் போல தங்களுடைய பாவம் உணர்த்தப்பட்டப்பின் வருந்தி, அறிக்கை ‌செய்து மன்னிப்பு கேட்கிறோம்?

தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்க ஆயத்தமாக இருக்கிறார். ஆனால், நாம் அறிக்கை ‌செய்ய ஆயத்தமாக இருக்கிறோமா? அறிக்கை செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால், தேவன் நம்முடைய பாவத்தை உணர்த்துகிற‌ அனுபவம் சற்று கடினமாக தான் ‌இருக்கும். அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில், பேதுரு எழுந்து நின்று யூதர்கள் நடுவே பேசிய போது அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள். குத்தப்படுவது என்பது வேதனை மிகுந்த அனுபவம். இருப்பினும் அந்த‌ யூதர்கள் மனந்திரும்பி இரட்சிப்பை பெற்றுக் கொண்டார்கள். அதுபோல, நாமும் நம்முடைய பாவத்தை தேவன்‌ உணர்த்தும் பொழுது எதிர்த்து நிற்காமல் ‌நம்மை ஒப்புக்கொடுத்தால் இரட்சிக்கப்படுவோம்.

"உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்" என்று தாவீதை போல நாமும் நம்முடைய பெருமைகளை விட்டு மன்றாடுவோம். கர்த்தர் உங்கள் குற்ற உணர்ச்சியில் இருந்து உங்களை விடுதலையாக்குவார். அமென்!!

📖 *BIBLE BEFORE BROWSE* 📖

காணாமல் போன அதிகாரம் !!

அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
லூக்கா 15:31

லூக்கா 15ஆம் அதிகாரத்தை "காணாமல் போன" அதிகாரம் என்று கூறுவர். ஏனென்றால், இதில் கூறப்பட்ட உவமைகள் எல்லாம் ‌காணாமல் போனவைகளைப் பற்றியதாகவே இருக்கும். இந்த அதிகாரத்தில் உள்ள மூன்று உவமைகளில் காணாமல் போன இளைய குமாரன் உவமை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். மற்ற இரண்டு உவமைகளில் காணாமல் போன ஆட்டை தேடி ‌மேய்ப்பன் செல்வார், காணாமல் போன வெள்ளிக் காசை அந்த ஸ்திரி தேடுவாள். ஆனால் காணாமல் போன இளைய குமாரனை மட்டும் தகப்பன் தேடி செல்ல‌மாட்டார். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன!! காணாமல் போன ஆட்டுக்கு தானாக திரும்பி வர‌‌ தெரியாது, வெள்ளிக் காசும் தானாக திரும்பி வராது. மற்றொரு காரணம், காணாமல் போன ஆடும், வெள்ளிக் காசும் தெரியாமல் ‌தொலைந்து போனது. ஆனால் இளைய குமாரன் ‌மட்டும் நன்றாக தெரிந்தே தன் தகப்பனை விட்டு பிரிந்து செல்கிறான்.

தகப்பனிடம் சொத்தை பிரித்து கேட்கிறான், தகப்பனும் இரண்டு குமாரர்களுக்கும் பிரித்து கொடுக்கிறார். மூத்த குமாரன் சொத்து ‌பிரிக்கப்பட்ட பின்பு கூட தகப்பனோடு இருக்கிறார், ஆனால் இளைய குமாரனோ பிரிந்து செல்கிறான். இதே போல தான் கர்த்தர் நமக்கு தெரிந்தெடுக்கிற உணர்வை‌ கொடுத்திருக்கிறார்! நாம் மூத்த குமாரனை போல கர்த்தரோடு‌ இருக்கலாம் அல்லது இளைய குமாரனை போல பிரிந்து செல்லலாம்.‌ அது நம்முடைய கையில் தான் இருக்கிறது. நம்முடைய கேள்வி ‌என்னவென்றால் தகப்பன் ஏன் இளைய குமாரனை தேடி செல்ல‌வில்லை?🤔 இளைய குமாரன் மனந்திரும்பாமல் தகப்பன் எத்தனை முறை போய்‌ அழைத்தாலும் அவன் திரும்பி வர‌‌ போவது இல்லை. எனவே தான் தகப்பன் காத்திருந்தார், ஆனால் ‌அவனை மறந்து விடவில்லை. அதனால் தான் இளைய குமாரன் புத்தி தெளிந்து, மனந்திரும்பி வரும்போது தகப்பன் ஒடி போய் அவன்‌ தூரத்தில் இருக்கும் போதே கட்டி அனைத்து கொண்டார்.

இனி தான் முக்கியமான செய்தியே இருக்கிறது!! இளைய குமாரன் ‌திரும்பி வந்ததால் வீட்டில் பெரிய விருந்து நடைபெறுகிறது. இதை கண்ட மூத்த குமாரன் எரிச்சலடைந்து வீட்டிற்கு உள்ளே வர மனதில்லாமல் வெளியே நிற்கிறார். தகப்பன் அதைக் கண்டு வெளியே வந்து மூத்த குமாரனை வருந்தி அழைக்கிறார். இளைய குமாரன் பிரிந்து செல்லும் போது வருந்தி அழைக்காத தகப்பன் மூத்த ‌குமாரனுக்காக இறங்கி வருகிறார். காரணம், அவன் சொத்தை பிரித்து கொடுத்த‌‌ போது கூட‌ தகப்பனை பிரிந்து செல்லவில்லை. அதனால் தான் தகப்பன் அவனுக்காக இறங்கி ‌வந்தார். நம்ம கூட‌ பல முறை மூத்த குமாரனை போல சோர்ந்து போகிறோம்.‌ ஒன்றை மற்றும் ‌புரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களை போல் உலக சொத்துக்கள் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம்.‌ ஆனால் மூத்த குமாரனை போல தகப்பனாகிய இயேசுவை மட்டும் சொத்தாக வைத்துக் கொள்ளுங்கள். இளைய குமாரன் பிரிந்து சென்ற‌ போது குறைவோடு இருந்தான். மூத்த குமாரன் ஒரு நாளும் குறைவுபடவே இல்லை. ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, தகப்பனோடு இருந்தால் குறைவில்லை!!✨ ஆமென்!!

📖 *BIBLE BEFORE BROWSE* 📖

விசுவாசம்-1 😇
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.
எபிரெயர் 11:6 📖

விசுவாசிகள் என்பது கிறிஸ்தவர்களின் மற்றொரு பெயராகும். விசுவாசம் இல்லாமல் கிறிஸ்தவராக இருப்பது கூடாத காரியம். விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடம் எதையும் பெற்றுக் கொள்ள இயலாது. விசுவாசம் என்பது பயிற்சியினால் வருவது. ஒரே நாளில் நாம் விசுவாச வீரர்கள் ஆக இயலாது. நாம்‌ எல்லாருக்கும் இயேசப்பா வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதை பெற்றுக் கொள்ள விசுவாசம் அவசியம். நம்மில் பலர் விசுவாசிக்காமல் இருப்பதின் காரணம், பயம். ஒரு காரியத்துக்காக காத்திருந்து அது கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வேதனையாக இருக்கும். எனவே தான் நாம் எப்போதும் விசுவாசிப்பதற்கு தயங்குவோம். ஏனென்றால், ஒன்றை விசுவாசித்து விட்டு நாம் ஏமாற்றம் அடைந்தால் அதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. இது நம்முடைய விசுவாச பலவீனம். ஒருவேளை உங்களுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குறுதிகளை நம்புவதற்கு கஷ்டமாக இருந்தால் எபிரெயர் 11ஆம் ❤️  அதிகாரத்தை வாசித்து பாருங்கள். நம்முடைய முன்னோர்கள் எல்லோருமே விசுவாசத்தினால் மட்டுமே வாக்குத்தத்தங்களை சுதந்தரித்தார்கள்.

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."
எபிரெயர் 11:1

நம் கண்களுக்கு முன்பாக இருப்பதை
நம்புவதற்கு விசுவாசம் தேவையில்லை. நம்மால் பார்க்க முடியாத, உணர முடியாத காரியத்தை நம்புவதற்கு தான் விசுவாசம் வேண்டும். எனவே காணாத காரியத்தை நம்புங்கள். ஆபிரகாமுக்கு செய்தவர் உங்களுக்கும் செய்வார் !! ✨
ஆமென்!

📖 *BIBLE BEFORE BROWSE* 📖