வாய்மொழிப் பயிற்சி (Khrishwin Ramesh (Sass)) by Khrishwin Ramesh (Sass)

ஒன்று
சுகாதாரமான, மாசுபாடற்ற சுற்றுச்சூழலைப் பெறுவது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையாகும். நாம் வாழும் இந்தப் பூமியில், எதிர்காலத் தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக நாடுகளுக்குச் சவால்மிக்க பிரச்சினையாகச் சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை அதிகரிக்கிறது; மழை குறைகிறது. இமயமலைப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருவருவதால் கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தப் பல நாடுகள் திட்டங்களை முன்வைத்தன. ஆனால், சில நாடுகளின் ஒத்துழைப்பின்மையால் அவை செயல்படாமல் போயின.

எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் நெகிழி பொருள்கள் பூமியின் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகையால், இவ் போட்ன பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது தூய்மையான காற்றைச சுவாசிப்பதற்கு வழிவகுக்கும். அது சுற்றுச்சூழலுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய தொண்டாகும்.

kjbjh

கேள்வி 1
கண்காட்சியில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை விவரி

கேள்வி 2
உணவுக் கண்காட்சியில் நடைபெற்ற மற்ற நடவடிக்கைகள் யாவை?

கேள்வி 3
'இத்தகைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.' என்னும் கூற்றுக்குரிய காரணங்களை கூறு.

கேள்வி 1
இந்த காணொளியில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கு.

கேள்வி 2
இந்த திட்டத்தில் யாரெல்லாம் பங்கெடுக்கிறார்கள்?

கேள்வி 3
மறுபயனீட்டின் முக்கியத்துவத்தை சிங்கப்பூரர்கள் அனைவரும் அறிந்துக்கொள்ள என்ன செய்யலாம்?

கேள்வி 1
இந்த காணொளிக் காட்சியின் நடவடிக்கைகளில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள்?

கேள்வி 2
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்கள் ஏன் இனநல்லிணக்கத்தை பேண வேண்டும்?

கேள்வி 3
பல இன சிங்கப்பூரர்கள் தங்கள் உறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகளை குறிப்பிடுக.

கேள்வி 1
இந்த காணொளி கூறும் கருத்துக்களை விளக்கு.

கேள்வி 2
உன் நண்பர் ஒருவர் ஏதேனும் ஒன்றை தனக்கு புரியவில்லை என்று உன்னை சொல்லித்தருமாறு கேட்டால், உன் மனநிலை எவ்வாறு இருக்கும்?

கேள்வி 3
வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்க சிங்கப்பூரில் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா?

மூன்று
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பர். ஆனால் இன்று மனிதர்களுள் பலரும் சிரிக்க மறுப்பவர்களாகவோ அல்லது சிரிக்க மறந்தவர்களாகவோ இருக்கின்றனர். வாழ்க்கைச் சூழ்நிலைகள் மனிதர்களின் சிரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்துவிட்டன. ஒரு மனிதன் தனது குழந்தைப் பருவத்தைக் கடப்பதற்குள் அவன்மீது கல்வியை ஒரு சுமையைப் போல ஏற்றி வைக்கின்றோம். அந்தச் சுமையை நன்றாகச் சுமந்து செல்பவனைத்தான் நல்ல மாணவன் என்றும் பாராட்டுகிறோம். சுமக்க முடியாதவர்களைத் திறன் குறைந்தவர்கள் என்கிறோம். அப்போதிருந்தே அவன் சிரிப்பை மறந்து விடுகின்றான்.

சிரிப்பு என்பது மனிதன் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் செயல்பாடு. ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் ஒரு மனிதன் பல சந்தர்ப்பங்களில் தனது மகிழ்ச்சியை சிரிப்பின் மூலம் வெளிப்படுத்துவான். இவ்வாறு அடிக்கடி சிரிக்கும் போது நாம் ஆழமாக மூச்சை உள்ளே இழுக்கின்றோம். அதனால் நமது மூளைக்கு அதிக அளவு ஆற்றல் கிடைக்கின்றது. நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. இதன்மூலம் மனிதன் புத்துணர்வுடனும் செயல் படுகின்றான்.

இரண்டு
மனிதனுக்குப் பகைவனாக அமைவது பயம். சிலருக்கு மருத்துவர்களைக் கண்டால் பயம்; சிலருக்கு மேலதிகாரிகளைக் கண்டால் அச்சம். இத்தகைய அச்சவுணர்வுகள் நமது தேவையற்ற கற்பனையால் எழுகின்றன. மனிதன் தன் குறிக்கோளை அடையவிடாமல் தடுக்கிறது பயம். அது மனிதனின் தன்னம்பிக்கையை அசைத்துவிடுகிறது.

பயம் நஞ்சுக்குச் சமம் ஆகும். அது நம் உடலிலும் உள்ளத்திலும் மாறுதலை உண்டாக்குகிறது. பயப்படுபவர்கள் புதிதாக எந்தவொரு செயலையும் தொடங்கத் தயக்கம் காட்டுவார்கள்.

இப்படிப்பட்ட பயத்தைப் போக்குவது எப்படி? “எதைக் கண்டு பயப்படுகிறீர்களோ அதைச் செய்யத் தொடங்குங்கள். பயம் மறைந்துபோவதை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள்”,என்பது அறிஞர் ஒருவரின் கூற்று. தண்ணீரைக் கண்டு பயப்படுபவன் குளத்தில் இறங்கி நீந்தக் கற்றுக்கொள்ளஒவேண்டும். இவ்வாறு செய்தால் அவனுக்கு நீரைப் பற்றிய பயம் போகும். ஆகையால், பயத்தைப் போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

நான்கு
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூரில் பாலர் பருவ மேம்பாட்டின் தரத்தை   உயர்த்துவதில் இச்சட்டம் முக்கியப் பங்காற்றும்.  குடும்பத்தை வளர்ப்பதற்கான நல்லதோர் இடமாகச் சிங்கப்பூரை அரசாங்கம் உருவாக்குகிறது என்ற கூடுதல் நம்பிக்கையைப் பெற்றோர்களுக்கு இச்சட்டம் அளிக்கும்.

பாலர் பள்ளிகளில் காணொளிகள் எடுக்கவும் ஒலிப்பதிவுகள் செய்யவும் புதிய சட்டம் வழிவகை செய்யும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் திரு டான் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளாகப் பொதுமக்களுடன் கலந்தாலோசித்துப் புதிய நிபந்தனைகளை எடுத்துரைப்பதற்காகப் பல்வேறு கூட்டங்களை நடத்திய பிறகே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரிவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் அரசிதழில் சேர்க்கப்பட்ட பின்பு புதிய சட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும். இச்சட்டம் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.